Advertisment

மோடியை திருமணம் செய்ய போராடும் இப்பெண்ணின் கடந்த காலம் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்காது

நரேந்திரமோடியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி, டெல்லி ஜந்தர் மந்தரில், மோடி புகைப்படத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Narendra modi, Om shanthi Sharma, Delhi, jantar mantar,

பிரதமர் நரேந்திரமோடியை தான் திருமணம் செய்வேன் என, ராஜஸ்தானை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவர், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்திவரும் செய்தியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம்.

Advertisment

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா. இவர், பிரதமர் நரேந்திரமோடியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி, கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில், மோடி புகைப்படத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

“எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. ஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை. நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். அதுபோல, மோடியும் தனிமையில் இருக்கிறார். அதனால், நான் அவரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.”, என அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

“பெரியவர்களை மதிக்க வேண்டும் என சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுத்திருக்கின்றனர். நான் மோடியை மதிக்கிறேன். என்னை மனநோயாளி என நினைத்து மற்றவர்கள் என்னை பார்த்து சிரிக்கின்றனர். ஆனால், என் மனநிலை நன்றாக உள்ளது. பணத்துக்காக நான் அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. என்னிடமே நிலம், சொத்துகள் ஆகியவை நிறைய உள்ளன. அதை விற்றுகூட மோடியை காப்பாற்றுவேன்”, என கூறியிருந்தார்

“அவரை பார்ப்பதற்கு யாரும் என்னை அனுமதிக்கவில்லை. அதனால் தான் இங்கு போராட்டம் நடத்திவருகிறேன். மோடி என்னை வந்து சந்திக்கும் வரை நான் போராட்டத்தை தொடருவேன்”, என அப்பெண் கூறினார்.

அப்பெண் போராட்டம் நடத்துவது மட்டும்தானே நமக்கு தெரியும். ஆனால், அவருடைய குடும்ப பின்னணி குறித்து கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

தன்னுடைய கடந்த காலம் குறித்து scoopwhoop இணையத்தளத்திற்கு அவர் பேட்டியளித்திருந்தார். அதில், அவர் குறிப்பிட்டதாவது:

ஓம் சாந்தி சர்மாவுக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரை சேர்ந்த கண்ணையா சர்மா என்பவருடன் திருமணமானது. அவர், சாந்தியை மனநலம் சரியில்லாதவர் எனக்கூறி தனித்துவிட்டு சென்றபோது, சாந்தி 6 மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறார். இப்போது அவருடைய மகளுக்கு வயது 20.

அதே காரணத்தை சொல்லி, அவரது நான்கு சகோதரர்கள் மற்றும் அவரது மனைவிகளும் சேர்ந்து துரத்திவிட்டதாக தெரிவிக்கிறார் ஓம் சாந்தி.

“என்னுடைய அண்ணன் சுஷில் சர்மாவின் மனைவி ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். என்னுடைய மகளை அவர்தான் வளர்த்து வருகிறார். நான் என் மகளை பார்க்கக்கூட அனுமதிக்க மாட்டார்”, என ஓம் சாந்தி கூறினார்.

“ஆறு மாதங்களுக்கு முன் என் மகளை பார்க்க ஜெய்ப்பூருக்கு சென்றேன். ஆனால், ஒருமுறை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. என்னுடைய அவல நிலையை உங்களால் கற்பனைகூட செய்ய முடியாது. உங்கள் குழந்தையை நீங்கள் பார்க்க முடியாது என சொல்லும்போது அது உங்களுக்கு மிகவும் வலியை தரும்”, என்கிறார்.

ஜெய்ப்பூரில் தனக்கு நிலம் உள்ளிட்ட சொத்துகள் இருந்தும் அதிலிருந்து எதையுமே தராமல், தன் சகோதரர்கள் ஏமாற்றுவதாகவும் ஓம் சாந்தி குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடியை திருமணம் செய்துகொவதற்காக ஒரு பெண் போராடுகிறோம் என்றவுடன் பலரும் சிரித்திருப்பீர்கள். ஆனால், அவர் கடந்துவந்த வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை என்பது இப்போது உங்களுக்கு புரியும்.

Om Shanthi Sharma Jantar Mantar Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment