கடந்த வாரம் சனிக்கிழமை காலை முதல் மும்பையில் கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிவிட்டது. வானிலை மைய அறிக்கையின் படி, ஆகஸ்ட் 27-ஆம் தேதி காளை 8 மணியிலிருந்து 28-ஆம் தேதி காலை 8 மணி வரை 102mm மழை பெய்துள்ளது. வொர்லி பகுதியில் 63.77mm மழையும், பைகுலா பகுதியில் 78.21mm மழையும், பந்த்அப் பகுதியில் 90.63mm மழையும், விக்ரோலி பகுதியில் 111.96mm மழையும் பெய்துள்ளது. குறிப்பாக நேற்று (திங்கள்) காலை 8.30 மணியிலிருந்து மதியம் 2.30 மணிவரை 35.88mm மழை கொட்டித் தீர்த்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/z187-300x217.jpg)
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையில், மும்பையின் சில பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/z188-300x217.jpg)
சாலைகளில் ஆங்காங்கே 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள 7 ஏரிகளும் 100 சதவீதம் நிரம்பிவிட்டன.
பல இடங்களில் தண்டவாளங்களே கண்களுக்கு தெரியாததால், ரயில்களின் வருகையும், புறப்பாடும் தாமதமாகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/z189-300x217.jpg)
வெள்ள அபாய எச்சரிக்கையால் பாந்த்ரா - வொர்லி பகுதிகளை இணைக்கும் ராஜீவ் காந்தி இணைப்புப் பாலம் மூடப்பட்டுவிட்டது.
பொதுமக்கள் எந்த இடத்தில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவர்கள்
Mumbai Police: 100
Traffic Helpline WhatsApp Number: +91-8454999999
MCGM Helpline +91-22-22694725, +91-22-22694727, 1916
ஆகிய எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மும்பை காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில், இன்று மழை வருவதற்கு முன் இருந்த வானிலையும், அதற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பகுதியே மறைந்து போகும் அளவிற்கு வானிலை மாறி இருக்கும் தத்ரூப படத்தை கீழே காணலாம்.