சென்னை வெள்ள மழையை விட குஜராத், ராஜஸ்தானுக்கு கூடுதல் மழை: வெதர்மேன் எச்சரிக்கை!

இது 50-100 வருடங்களுக்கு ஒரு தடவை நடக்கும் அபூர்வ நிகழ்வு ஆகும்.

ஃபேஸ்புக்கில் பிரபலமான தனியார் வானிலை அறிக்கை நிபுணரான ‘தமிழ்நாடு வெதர்மேன்’ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளில் இன்று முதல் செவ்வாய் கிழமை வரை பேய் மழை பெய்ய போகிறது. அதாவது இது மாதிரி கடந்த 100 வருடங்களில் நடந்தது இல்லை. அங்கு இருக்கும் அரசாங்கங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். வர போகும் 2-3 நாட்களுக்கு (அலுவகங்கங்கள் உட்பட) அங்கு விடுமுறை அளிக்கப் பட வேண்டும்.

பேய் மழை தெற்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளில் பெய்ய போகிறது. மேற்கு மத்திய பிரதேசமும் கன மழை பெற கூடும். வெளி நாட்டு வானிலை முன் எச்சரிக்கை மையங்கள் பல இந்த விஷயத்தில் ஒரு மித்த கருத்தை கொண்டு உள்ளன. அதாவது சென்னை செம்பரம்பாக்கம் வெள்ளத்தில் நாம் பெற்ற மழையை விட ஒரு மடங்கு கூடுதலாக அந்த பாலைவனத்தில் பெறப் போகிறார்கள். உண்மையில் பிரம்மிக்க வைக்க போகும் மழையாக இருக்கப் போகிறது. இது எதனால் ஏற்பட்டது என்றால், காற்றழுத்த சுழற்சி குஜராத் பகுதிகளில் மாட்டி கொண்டது. அது எங்கேயும் நகர முடியாமல் அங்கேயே இருப்பதினால் இந்த பேய் மழை பெய்யப் போகிறது. அங்கேயே எல்லா மழையையும் கொட்டி தீர்க்க போகிறது. ஈரம் இருப்பதினால் பருவ மழை கோட்டின் ஒரு முனையான (கடைசி பகுதி) அந்த முனையில் இந்த பேய் மழை ஏற்பட போகிறது.

இந்த பேய் மழையினால் ஆற்று படுகைகளுக்கு மிகுந்த நீர் வரத்து இருக்கும். இது 50-100 வருடங்களுக்கு ஒரு தடவை நடக்கும் அபூர்வ நிகழ்வு ஆகும்.

கீழே இருக்கும் படங்களை பாருங்கள். உங்களுக்கே எவ்வளவு மழை பெய்ய போகிறது என்பது புரியும். இது ஒரு அனுமானம்தான். நடக்க போவது இதை விட அதிகமாக இருக்கப் போகிறது.
தமிழ் நாட்டில் வெப்ப சலன மழை ஜூலை கடைசி வாரத்தில் இருக்க போகிறது.
25-ம் தேதியில் இருந்து வெப்ப சலன மழை தமிழ் நாட்டில் துவங்க போகிறது. கடைசி வாரம் மிதமான மழை முதல் நல்ல மழையை பெற வாய்ப்பு இருக்கிறது. சென்னை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மழை பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close