Advertisment

"முன்ஜென்ம பாவத்தாலேயே புற்றுநோய் ஏற்படுகிறது": அசாமிலும் ஒரு மங்குனி அமைச்சர்

முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாகவே புற்றுநோய் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் ஏற்படுவதாக, அசாம் மாநில ஹிமாந்தா பிஷ்வா சர்மா கூறியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Himanta Biswa Sarma, Assam Health Minister, Health Minister Himanta Biswa Sarma,

முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாகவே புற்றுநோய் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் ஏற்படுவதாக, அசாம் மாநில ஹிமாந்தா பிஷ்வா சர்மா கூறியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அசாம் மாநிலத்தில் நிதி, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு அமைச்சராகவும், பாஜக தலைவராகவும் இருப்பவர் ஹிமாந்தா பிஷ்வா சர்மா. முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாகவே புற்றுநோய் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் ஏற்படுவதாக ஹிமாந்தா அண்மையில் தெரிவித்தார். மேலும், "இந்துக்கள் கர்மா மீது நம்பிக்கை உடையவர்கள். அதனால், தற்காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், கர்மாவுக்கும் தொடர்புள்ளது", என சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கூறினார்.

"மக்கள் செய்த பாவங்களால் ஏற்படும் வினையை தடுக்க முடியாது. பலருக்கும் ஏன் இளம் வயதிலேயே புற்றுநோய் ஏற்படுகிறது என வியக்கிறார்கள். ஆனால், அவர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும். இது அவருக்கு விதிக்கப்பட்ட நீதி. அதைத்தவிர ஒன்றும் இல்லை", என அவர் கூறினார்.

மேலும், தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளத்திற்கு கடுமையாக உழைக்கும் ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் அதிக சம்பளம் பெற்றும் கடுமையாக உழைப்பதில்லை என தெரிவித்தார். "நீதி என்பது எங்கும் உள்ளது. முன் ஜென்ம பாவத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்", என அவர் கூறினார்.

பாஜக அமைச்சரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அம்மாநில காங்கிரஸ், இக்கருத்து புற்றுநோயாளிகளின் மனதை புண்படுத்தும் நோக்கில் உள்ளதாகவும், அமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ஹிமாந்தா கடந்த 2015-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறியவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment