Advertisment

காங்கிரஸ் வியூகம் : 3 மாநில சட்டசபைத் தேர்தல் வெற்றிகளும் 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலும்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் தேர்தல் முடிவுகள்

சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் தேர்தல் முடிவுகள்

ரவீஸ் திவாரி, பியூஷ் அகர்வால்

Advertisment

சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் தேர்தல் முடிவுகள் : இந்தியாவின் இதயமான (இந்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும்) இந்துத்துவாவின் பெயரைச் சொல்லியும் தோல்வியை சந்தித்திருக்கிறது பாஜக.  நேற்று வெளியான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல்கள், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

மூன்று மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 180 தொகுதிகளில் தோல்வியை சந்தித்திருக்கிறது பாஜக. 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலோடு ஒப்பிடுகையில் 48% இடங்களில் தோல்வி அடைந்திருக்கிறது பாஜக.

மேலும் படிக்க : மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைப்பது யார் ?

சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் தேர்தல் முடிவுகள் - 2019 பொதுத் தேர்தல்

இந்த மூன்று மாநிலங்களில் மொத்தம் 65 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த பொதுத்தேர்தலில் மட்டும் 62 இடங்களில் வெற்றி பெற்றது பாஜக. ஆனால் இந்த சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நிச்சயமாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் 31 மாநிலங்களவைத் தொகுதிகளில் தோல்வியைத் தழுவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் தேர்தல் முடிவுகள் சத்தீஸ்கர் மாநில தேர்தல் முடிவுகள்

ஆனால் இந்த தோல்விகளை பாஜக இவ்வாறு தான் அணுகிறது. “மத்தியப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட வெற்றி என்ற இலக்கில் தான் தோல்வியை சந்தித்திருக்கின்றோம். அதே போல் ராஜஸ்தானிலும் அவ்வளவு ஒன்றும் மோசமான தோல்வி இல்லை” என்று கூறிக் கொள்கின்றனர் பாஜக தலைவர்கள்.

காங்கிரஸ் இந்த வெற்றியை எப்படி கையாளுகிறது ?

2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பின்பு காங்கிரஸ்ஸிற்கு இறங்கு முகமாகத்தான் இருந்தது. ஆனால் நேற்றைய தேர்தல் முடிவுகள் 138% வெற்றி பெற்றிருக்கிறது காங்கிரஸ். 163 சட்டசபை தொகுதிகளை வென்றதன் மூலம் இந்த வெற்றியை சாத்தியப் படுத்தியுள்ளது காங்கிரஸ்.

சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் தேர்தல் முடிவுகள் மத்தியப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள்

மக்களவையில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் :

தேர்தல் ஆணையம் முறையாக எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை நேற்று இரவு தான் அறிவிக்கத் தொடங்கியது.

சத்திஸ்கர் மாநிலத்தில் இருக்கும் 11 மக்களவைத் தொகுதிகளில் 10 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  ராஜஸ்தானில் கடந்த முறை தேர்தலில் 25 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தற்போது 13 இடங்களில் மட்டுமே வெற்றி. மத்தியப் பிரதேசம் மாநிலத்திலும் 27 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தற்போது 17 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் தேர்தல் முடிவுகள் ராஜஸ்தான் மாநில தேர்தல் முடிவுகள்

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளமும் பாஜகவிற்கு கடுமையான போட்டியாக உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் மேலும் ஒரு 50 தொகுதிகளில் நிச்சயமாக பாஜக தோல்வியைத் தழுவும் என்பதில் சந்தேகம் இல்லை.

கர்நாடகா

கர்நாடகாவில் தற்சமயம் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கும் 28 மக்களவைத் தொகுதிகளில் வெறும் 6 இடங்களில் தான் வெற்றியை கைப்பற்றியது பாஜக. 2014ம் ஆண்டு தேர்தலில் 17 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது கர்நாடகா என்பது குறிப்பிடத்தக்கது.  2014ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பிறகு எப்படி 22 மாநிலங்களில் 14 மாநிலங்களில் பாஜக கூட்டணி யுத்தியை பயன்படுத்தியிருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இரண்டு தேர்தல் முறைகளும் ஒரே மாதிரியான முடிவுகளை தருவதும் இல்லை.

காங்கிரஸிற்கு வாய்ப்புகள் அதிகம்

ஆனால் 2014ம் ஆண்டு பாஜக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாமல் போனது மிகப் பெரிய காரணமாக அமைந்திருக்கிறது இந்த தோல்விகளுக்கு. விவசாயிகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லெண்ணத்துடன் ஆட்சியை வழங்க காங்கிரஸ் விரும்பும் பட்சத்தில் இது போன்ற மகத்தான வெற்றியை காங்கிரஸ் 2019 பொதுத் தேர்தலில் பெறும்.

All India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment