Advertisment

வீடியோ: 16 போர் விமானங்களை நெடுஞ்சாலையில் தரையிறக்கி இந்திய விமானப்படை சாதனை

உத்தரபிரதேச மாநிலம், ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில், 16 போர் விமானங்களை தரையிறக்கி, இந்திய விமானப்படை மாபெரும் சாதனை படைத்தது.

author-image
Nandhini v
Oct 24, 2017 13:49 IST
New Update
IAF’s C-130

உத்தரபிரதேச மாநிலம், ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில், 16 போர் விமானங்களை தரையிறக்கி, இந்திய விமானப்படை சாதனை படைத்தது.

Advertisment

அவசர காலங்களில் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையிறங்குவது குறித்த ஒத்திகை, உத்தரபிரதேச மாநிலத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. அப்போது, ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் 16 போர் விமானங்களை தரையிறக்கி இந்திய விமான படையினர் சாதனை படைத்தனர்.

அவற்றுள், இந்திய விமானப்படையின் சி-130 ரக ‘சூப்பர் ஹெர்குலெஸ்’ சரக்கு போர் விமானம் முதன்முறையாக நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தின் மதிப்பு ரூ.900 கோடி. ஜாக்குவார்ஸ், மிரேஜ் 2000, சுகோய் 30 உள்ளிட்ட பல போர் விமானங்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றன.

இந்த ஒத்திகையை ஆயிரக்கணக்கிலான மக்கள் கண்டு ரசித்தனர். இந்த ஒத்திகைக்காக, நேற்றும் இன்றும் ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்றும் இன்றும் போக்குவரத்து விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும், இன்று மதியம் 2 மணிவரை அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

publive-image

கடந்த 2-16-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி, மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தரையிறக்கப்பட்டு சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

#Lucknow #Uttar Pradesh #Indian Air Force
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment