/tamil-ie/media/media_files/uploads/2018/06/s314.jpg)
Jee Advance 2018 Topper: ப்ரணவ் கோயல் முதலிடம்
IIT Jee Advance 2018 Topper: ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ப்ரணவ் கோயல் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
IIT Jee Advance 2018 Topper: நாட்டில் உயரிய கல்வி நிறுவனமான ஐஐடி கல்லூரிகளில் படிப்பதற்கு நடத்தப்படும் ஜேஇஇ-2018 மெயின்ஸ் தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இன்று வெளியிட்டது.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்காக அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (ஏஐஇஇஇ) நடத்தப்பட்டு வந்தது. பின்னர், இது ஜேஇஇ முதன்மைத் தேர்வு எனப் பெயர் மாற்றப்பட்டது.
இந்தத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், ஜேஇஇ (அட்வான்ஸ்) 2018 தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டது.
இதில், பஞ்சகுலா பகுதியைச் சேர்ந்த ப்ரணவ் கோயல் என்பவர் 337 ஸ்கோர் பெற்று, இந்தாண்டுக்கான (2018) ஜேஇஇ டாப்பராக இடம் பிடித்துள்ளார். 360க்கு 337 ஸ்கோர் பெற்றுள்ளார் ப்ரணவ்.
3. Pranav Goyal of who appeared for the exam from Panchkula region is the JEE Adv topper this year. His score: 337/360 @IndianExpress
— Ritika Chopra (@KhurafatiChopra) June 10, 2018
More Details Awaited...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.