தொழிற்சாலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் மின்சாரம் கட்: கர்நாடக அரசு

இவற்றுள் பெரும்பான்மையானோர் குழந்தை தொழிலாளர்களாக தொழிற்சாலைகளிலும், பட்டாசு, பீடி ஆலைகளிலும், உயிருக்கு ஆபத்தான வேலைகளிலும் பணிபுரிகின்றனர்.

இந்தியாவில் 37% மக்கள் தொகை 18 வயதிற்குட்பட்டோராக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் பெரும்பான்மையானோர் குழந்தை தொழிலாளர்களாக தொழிற்சாலைகளிலும், பட்டாசு, பீடி ஆலைகளிலும், உயிருக்கு ஆபத்தான வேலைகளிலும் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக, அவர்களை பணியில் அமர்த்தும் தொழிற்சாலைகளுக்கு முழுவதும் மின்சாரம் ரத்து செய்யப்படும் என, கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அந்த உத்தரவின்படி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், 1986 மற்றும் கர்நாடக வணிகதளங்கள் சட்டம் 1961, கர்நாடக தொழிற்சாலைகள் சட்டம் 1948- ஆகியவற்றை மீறுவோரின் மின்சாரம் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மின்துறை நிறுவனத்திற்கு எதிராக குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான பிரச்சாரம்” என்ற மனுவுக்கு உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close