Advertisment

அரசு பள்ளியில் ஐஏஎஸ் அதிகாரியின் மகள்... சட்டமன்ற உறுப்பினரும் தனது மகனை சேர்த்தார்!

கடன் வாங்கியாவது, தங்களது குழந்தையை தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என எண்ணும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu news today live

tamil nadu news today live

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சமீபத்தில் சேர்த்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மகனை அரசு பள்ளியில் சேர்ந்துள்ள சம்பவம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment

தனியார் பள்ளிகளில் சேர்த்தால் தான் தங்களது பிள்ளைகள் சிறப்பான எதிர்காலத்தை அடைவார்கள் என பெற்றோர்கள் மத்தியில் பொதுவான கருத்து நிலவி வருகிறது. இதனால், தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கவே அச்சம் கொள்கின்றனர் குழந்தைகளின் பெற்றோர். இதன்காரணமாக புற்றீசல் போல ஆங்காங்கே புதிது புதிதாக தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டு தான் வருகின்றன. இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டுல்லாமல் பெரும்பாலான மாநிலங்களிலும் இருக்கின்றன.

சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் ஐஏஎஸ்அதிகாரி ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க முடிவு செய்த சம்பவம் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் அதே சட்டீஸ்கர் மாநிலத்தில் மற்றொரு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதல்கான் சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற செயலாளருமான ஷிவ்சங்கர் பைக்ரா, தனது 5-வயது மகனை அரசு பள்ளியில் சேர்ந்துள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசித்து வரும் ஜாஸ்பூர் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெரும்பாலும் பாமர மக்களே தங்களது குடும்ப பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர். மேலும், தனியார் பள்ளியின் மீதுள்ள மோகம் காரணமாக கடன் வாங்கியாவது, தங்களது குழந்தையை தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என எண்ணும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த நிலையில், பாதல்கான் சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற செயலாளருமான ஷிவ்சங்கர் பைக்ரா, தனது 5-வயது மகனை அரசு பள்ளியில் சேர்ந்துள்ளார் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பைக்ரா பேட்டியளித்தபோது:

அறிவை வளர்த்துக் கொள்வது, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது போன்றவற்றிற்கு மொழி என்பது முக்கித்துவம் வாய்ந்தது. எனது மகனை தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படிக்க வைக்கும் பட்சத்தில், குடும்பத்தில் உள்ளவர்களால் அவனுக்கு படிப்பதில் உதவி செய்ய இயலாது.

மற்றவர்களை பார்த்து நான் எனது மகளை அரசு பள்ளிகளில் சேர்க்கவில்லை என கூறிய அவர், தொடர்ந்து பேசும்போது, எனது இரண்டு மகள்களையும் அரசு பள்ளியில் தான் சேர்த்து படிக்க வைத்தேன். அதற்கு பின்னர் தான் அவர்களை தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படிக்க வைத்தேன் என்று கூறினார்.

மேலும், சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் செயல்பாடு தரம்வாய்ந்ததாக இல்லை என்பதை ஒப்புக் கொண்ட பைக்ரா, அவர் சார்ந்திருக்கும் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறினார்.

முன்னதாக பால்ராம்பூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அவானிஷ் ஷரன் சமீபத்தில், அவரமகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். இந்த சம்பவம் செய்திகளில் வெளியான போதிலும், இது அவ்வளவு பெரிய நிகழ்வு ஒன்றும் இல்லை என்றும் கருத்து தெரிவித்தார் அவானிஷ் ஷரன் . அவானிஷ் ஷரனின் இந்த செயல்பாடு ஊடகங்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் என அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது என்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக பால்ராம்பூர் மாவட்ட ஆட்சியராக அவானிஷ் ஷரன் பொறுப்பேற்றது முதல், கடந்த இரண்டு வருடங்களாக பல்ராம்பூரில் உள்ள கல்வியின் முறையை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chhattisgarh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment