இந்தியாவில் உள்ள எல்லா நினைவுச்சின்னங்களையும், தஞ்சாவூர் ஓவியம் வரையும் பாணியில் டெல்லியை சேர்ந்த பெண் ஓவியக் கலைஞர் வரைந்துள்ளார்.
60 வயதாகும் சீமா சேத்தி டெல்லியை சேர்ந்த ஓவியர். டெல்லி, ஜோத்பூர், ஆக்ரா, உதய்பூர் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களை கண்டு வியந்துள்ளார். இந்நிலையில் இதை வரைய நினைத்த இவர் தஞ்சாவூர் ஓவிய பாணியை தேர்வு செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் தஞ்சாவூர் ஓவிய பாணியுடன், மிக்ஸ்டு மீடியா (mixed media) என்பதையும் பின்பற்றுகிறார். வாட்டர் கலர், தங்க காகிதம் ஆகியவற்றை வைத்து கான்வாஸில் வரைந்துள்ளார். ( canvas) .

தஞ்சாவூர் ஓவிய வடிவமைப்பு பொறுத்தவரை நாம் வழிபடும் கடவுளை வெவ்வேறு நிறங்களில் வரைந்து அதற்கு மேல் தங்கத்தால் கூடுதலாக வரையப்படும். ஓவியர் சீமா சேத்தி இந்தியாவின் நினைவுச் சின்னங்களான குதுப்மினார், தாஜ்மஹாலில் உள்ள வேலைபாடுகள் நிறைந்த கதவுகள் மற்றும் சித்தி சையதி மாஸ்க் ஆகியவற்றை வரைந்துள்ளார்.
இந்த ஓவியக் கண்காட்சி வரும் ஏப்ரல் 1-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில் இவர் 2000-ம் ஆண்டு நடைபெற்ற 2 நாள் பயிற்சி வகுப்பில்தான் தஞ்சாவூர் ஓவிய பாணியை கற்றுக்கொண்டார். இது தொடர்பாக அவர் பேசுகையில் “எனது ஓவியங்களால், நினைவுச்சின்னங்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதை காணும் பார்வையாளர்கள், நமது வரலாற்று நினைவுச்சின்னங்களின் முக்கியதுவத்தை அறிந்துகொள்வார்கள். மேலும் இது உங்களை அந்த காலத்திற்கு கொண்டு செல்லும்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில் முக்கிய அரசரான மகாராணா சங்காராம் சிங்-யின் புகழ்பெற்ற கவசத்தை இவர் மறு உருவாக்கம் செய்துள்ளார். மேலும் இலங்கையின், அனந்தபுரத்தில் உள்ள, கல்லிலான கலைவடிவத்தை, அவர் மறு உருவாக்கம் செய்துள்ளார்.

மேலும் இவர் புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களை மறு உருவாக்கம் செய்துள்ளார். “ சிறு வயதில் விடுமுறை நாட்களில் நான் அதிகமாக ஓவியம் வரைவதில்தான் கவனம் செலுத்துவேன். அப்பா நடத்தி வந்த தொழிலில், தீபாவளி பண்டிகையின்போது, வாழ்த்துகளை பகிர்ந்துகொள்ள கார்டு அனுப்புவார்கள். அதில் ராதா மற்றும் கிருஷ்ணனின் ஓவியங்கள் இருக்கும். அதை பார்த்துதான் ஓவியம் வரைய வேண்டும் என்று ஆவல் வந்தது” என்று அவர் கூறினார்.