தமிழகம் உட்பட நாடு முழுவதும் 2016-2017-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய திங்கள் கிழமை (ஜூலை 31) கடைசி நாளாகும். இன்னும் நீங்கள் உங்களது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், உடனடியாக செலுத்திவிடுங்கள். அபராதத்துடன் சேர்த்து வருமான வரி செலுத்துவதை தவிர்த்திடுங்கள்.
இணையத்தளம் மூலம் வருமான வரிகணக்கு தாக்கல் செய்வது எப்படி?
- வருமான வரி தாக்கல் செய்யும் இணையத்தளமான incometaxindiaefiling.gov.in. என்ற இணையத்தளத்திற்கு செல்லுங்கள், அங்கு ITR என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
- ITR-1 என்பது, மாத சம்பளதாரர்கள் மற்றும் மாத வருமானம் 2.5 லட்சத்தைவிட குறைவாக உள்ளவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்காக. ITR-2 என்பது மாத வருமானம் 5 லட்சத்திற்கு அதிகமாக உள்ளவர்களுக்கு. ITR-3 என்பது சொந்த தொழில் செய்பவர்களுக்கானது. ITR-4 என்பது வருவாய் கூடினாலும், குறைந்தாலும், அரசு நிர்ணயித்த வருவாய்க்கு ஏற்ப, குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்தும் வணிகர்கள் அல்லது தொழில் செய்வோர்களுக்கானது.
- ITR-2-ஐ க்ளிக் செய்யுங்கள். அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனமாக படியுங்கள். அதன்பிறகு, விண்ணப்பத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் பெயர், பான் எண் எனப்படும் நிரந்தர கணக்கு எண், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவற்றை கவனமாக நிரப்புங்கள். அதை முடித்த பின்பு, ’Validate’ என்பதை க்ளிக் செய்தால் திரையில் ’OK’ என காட்டும். அதனை க்ளிக் செய்யுங்கள்.
- இதன்பின் ‘Part B' என்ற அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள். அதை முடித்த பிறகு வருமான வரி தாக்கல் செய்யும் பக்கத்திற்கு செல்லுங்கள். அதில், நீங்கள் ஏற்கனவே வருமான வரிக்கென முன்பணம் செலுத்தியிருந்தால் அதனை குறிப்பிடுங்கள்.இதன்பின் ‘Validate' என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- அதன் பின், TDS பக்கத்திற்கு செல்லுங்கள். அதன்பிறகு ‘Validate' என்பதை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் ஏதேனும் சொத்துக்களை விற்றிருந்தால் 18 C விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.
- இதையடுத்து, வருமானம் பக்கத்த்திற்கு சென்று, பெயர், முகவரி, வருமானம் ஆகியவற்றை குறிப்பிடுங்கள். பின்பு, ‘Validate' என்பதை க்ளிக் செய்யுங்கள்.