Advertisment

சுதந்திர தின பாதுகாப்பு: மணிப்பூர் குழுக்களால் செங்கோட்டையில் அச்சுறுத்தல்- மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

செப்டம்பர் மாதம் டெல்லியில் G20 உச்சிமாநாடு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. இதற்கு நடுவில் இந்த ஆண்டு சுதந்திர தினம் (I-Day) வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Delhi

சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் ஒத்திகைகள் (Express Photo by Renuka Puri)

செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது குக்கி அல்லது மெய்தி குழுக்கள் போராட்டம் நடத்தலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Advertisment

மேலும், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, மூவர்ணக் கொடியை ஏற்றும் போது, ​​"சில அரசுக்கு எதிரான சக்திகள்" கொடிகள், பிளக்ஸ் கார்டுகள், முழக்கங்களை எழுப்பி எதிர்ப்புகளை காட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.  

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புத் தயார்நிலை குறித்து புது தில்லியில் சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG), CISF, தில்லி காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை (RPF) ஆகியவற்றுடன் உளவுத்துறை அமைப்புகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. இதில், விவாதிக்கப்பட்ட சாத்தியமான அச்சுறுத்தல்களில் இவையும் அடங்கும்.

செப்டம்பர் மாதம் டெல்லியில் G20 உச்சிமாநாடு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. இதற்கு நடுவில் இந்த ஆண்டு சுதந்திர தினம் (I-Day) வருகிறது. எனவே விழாவிற்கு முன்போ அல்லது விழாவின் போது நடக்கும் எந்தவொரு விரோதமான சம்பவமும் நாட்டின் பிம்பத்தின் மீது "எதிர்மறையான தாக்கத்தை" ஏற்படுத்தும், எனவே உயர்தர, பலதரப்பு நிகழ்வை நடத்துவதற்கான அதன் தயார்நிலையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, என்று கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு அதிகாரி கூறினார்.

முக்கிய நிகழ்வுகளின் போது அல்லது அதன் போது கூட தங்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக, பல்வேறு குழுக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மணிப்பூர் நிலைமை, விவசாயிகளின் கோரிக்கை, பொது சிவில் சட்டம், தொழிலாளர்/சேவைகள் தொடர்பான பிரச்சனைகள், இந்த ஆண்டு நிகழ்வுக்கான பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் தொடர்புடையதாகக் குறிப்பிடப்பட்ட முக்கியப் பிரச்சினைகளில் அடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டெல்லி காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களுடன் அச்சுறுத்தல் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது... போராட்டங்கள்/ ஆர்ப்பாட்டங்கள் குறித்த உண்மையான/முன்கூட்டிய அறிவிப்புகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தில்லியை நோக்கி போராட்டக்காரர்கள் அணிதிரள்வதையும் நகர்வதையும் கண்காணிக்க அவர்கள் அண்டை மாநிலங்களின் காவல் துறைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும், என்றும் கூறப்பட்டது.

சமூக ஊடகங்கள் தீவிரமயமாக்கல் மற்றும் மக்களை அணிதிரட்டுதல், உயரதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் போன்றவற்றுக்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது, என்று அந்த அதிகாரி கூறினார்.

லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அமைப்புகள், தேசிய புலனாய்வு முகமை மற்றும் டெல்லி காவல்துறையின் தலைமையகம் உட்பட டெல்லியில் உள்ள சில இடங்களில் உளவு பார்க்கும்படி தனது கூட்டாளிகளுக்கு உத்தரவிட்டதும் மத்திய புலனாய்வு அமைப்புகளால் விவாதிக்கப்பட்ட மற்ற முக்கிய விஷயங்களில் அடங்கும்.

அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment