Advertisment

மும்பை தாக்குதல் குற்றவாளி சஜித் மிர்; சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை தடுத்த சீனா; இந்தியா சாடல்

“நல்ல பயங்கரவாதிகள் vs மோசமான பயங்கரவாதிகள் என்று கூறி தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்ளும் நியாயப்படுத்தலையும் இரட்டை நிலைப்பாடுகளையும் ஒருவர் தவிர்க்க வேண்டும்” என்று குப்தா கூறினார்.

author-image
WebDesk
New Update
India, China blocks, UN, Sajid Mir, Global terrorist blacklist, india, 26/11 குற்றவாளி சஜித் மிர், சஜித் மிர்-ரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை தடுத்த சீனா; இந்தியா சாடல், india news, indian express news

26/11 குற்றவாளி சஜித் மிர்

குப்தா கூறுகையில், பயங்கரவாத பிரச்னையை சமாளிக்கும் நோக்கத்தில், “நல்ல பயங்கரவாதிகள் vs மோசமான பயங்கரவாதிகள் என்று கூறி தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்ளும் நியாயப்படுத்தலையும் இரட்டை நிலைப்பாடுகளையும் ஒருவர் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisment

“சிறிய புவிசார் அரசியல் நலன்களுக்காக" நிறுவப்பட்ட பயங்கரவாதிகளை ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்ய முடியாவிட்டால், அது பயங்கரவாதத்தின் சவாலை உண்மையாக எதிர்த்துப் போராடுவதற்கான" உண்மையான அரசியல் விருப்பமின்மையைக் காட்டுகிறது” என்று இந்தியா புதன்கிழமை கூறியது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் மிர்-ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவை சீனா தடுத்த ஒரு நாளுக்குப் பிறகு இது நடந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டத்தில் பேசிய, வெளியுறவு அமைச்சகத்தின், ஐ.நா. அரசியல் இணைச் செயலர், பிரகாஷ் குப்தா, “சஜித் மிர் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு முன்மொழிந்தபோது - பல உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கிய போதிலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைகள் காரணமாக உலக அளவிலான பட்டியலைப் பெறவில்லை - உலக அளவில் பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பில் ஏதோ தவறு இருப்பதாக நம்புவதற்கு எங்களுக்கு நியாயமான காரணங்கள் உள்ளன.” என்று கூறினார்.

மேலும், “ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட உலக அளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளை நாம் கண்டுபிடிக்க முடியாவிட்டால் - சின்ன புவிசார் அரசியல் நலன்களுக்காக - பயங்கரவாதத்தின் இந்த சவாலை உண்மையாக எதிர்த்துப் போராடுவதற்கான உண்மையான அரசியல் விருப்பம் நம்மிடம் இல்லை” என்று குப்தா கூறினார்.

பயங்கரவாத பிரச்சினையை சமாளிப்பதற்காக, குப்தா கூறுகையில், “நல்ல பயங்கரவாதிகள் vs மோசமான பயங்கரவாதிகள் என்று கூறி தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்ளும் நியாயப்படுத்தலையும் இரட்டை நிலைப்பாடுகளையும் ஒருவர் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா வந்த அன்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267-வது அல் கொய்தா தடைகள் குழுவின் கீழ் உலகளாவிய பயங்கரவாதி அறிவிப்பது மற்றும் அவருடைய சொத்துகளை முடக்குவது, பயணம் செய்யத் தடை மற்றும் ஆயுதத் தடைக்கு உட்படுத்த சஜித் மிர்-ரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட மற்றும் இந்தியாவால் நியமிக்கப்பட்ட திட்டத்தை பெய்ஜிங் தடுத்தது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், ஐ.நா.வில் சஜித் மிர்-ரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் திட்டத்தை சீனா நிறுத்தி வைத்தது தெரிய வந்தது. பெய்ஜிங் இப்போது இந்த திட்டத்தைத் தடுத்துள்ளது.

சஜித் மிர் இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவர், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் அவரது பங்கிற்காக அமெரிக்காவால் அவரது தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால், பயங்கரவாத நிதியுதவி வழக்கில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார்.

பாகிஸ்தானிய அதிகாரிகள் சஜித் மிர் இறந்துவிட்டதாகக் கூறினர். ஆனால், அதை மேற்கத்திய நாடுகள் நம்பவில்லை, மேலும் அவரது மரணத்திற்கான ஆதாரத்தைக் கோரின. கடந்த ஆண்டின் இறுதியில் பாகிஸ்தான் செயல்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) மதிப்பீட்டில் இந்த பிரச்சினை ஒரு முக்கிய உறுதியான புள்ளியாக மாறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment