Advertisment

ரேபிட் டெஸ்ட் கருவிகள் தாமதம்: கொரோனா பரிசோதனையில் பின்னடைவா?

தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், படிப்படியாக அணுகும் நடைமுறையின்படி, முக்கியமான பொருள்களுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரேபிட் டெஸ்ட் கருவிகள் தாமதம்: கொரோனா பரிசோதனையில் பின்னடைவா?

மக்கள் வாழும் அடர்த்தியான கிளஸ்டர்கள், புலம்பெயர்ந்தோர் அதிகளவில் வாழும் பகுதிகள், தொற்று நோய் தடுப்பு மையங்கள் ஆகிய இடங்களில் கடந்த வாரம் மாபெரும் கொரோனா வைரஸ் சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. எனினும், இதற்கு தேவைப்படும் ரேபிட் டெஸ்ட் கிட் சாதனங்கள்  வந்து சேராததால், சோதனை முயற்சி தடைபட்டுள்ளது.

Advertisment

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 5 லட்சம் டெஸ்ட் கிட்டுகள் உத்தரவிட்டதாகவும், அதில் 2.5 லட்சம் கடந்த வாரம் வழங்கப்பட இருந்ததாகவும் அறியப்படுகிறது.

"சப்ளையர் விரைவாக வழங்குவதாகக் தெரிவித்தார். ஆனால், இதுநாள் வரையில் யாரும் வரவில்லை. அடுத்த இரண்டு-மூன்று நாட்களில் அனுப்பி வைப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது… சாதனங்கள் விரைவில் வரும் ”என்று ஐ.சி.எம்.ஆர்-ன் தொற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் ஆர்.ஆர் கங்ககேத்கர் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.

தென் கொரியாவின் வெற்றிகரமான தடுப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, செரோலாஜிக்கல் சோதனைகளை வேகப்படுத்துவதன் மூலம், வைரஸ் தொற்று உடைய நோயாளிகளை கண்டறிந்து, தனிமைப்படுத்தி கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டிருந்தது. எனவே, கோவிட்- 19 ரேபிட் டெஸ்டை அதிகபடுத்துவதன் மூலம், வைரஸ் பரவலின் தன்மை குறித்த  மதிப்பீட்டைத் மிகவும் துல்லியமாக பெறுவதற்கான அரசின் முயற்சிகள் இந்த தாமதத்தால் பாதித்துள்ளது.

இந்த கட்டுரைய ஆங்கிலத்தில் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுக்க புது கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 786. இப்போது வரையில் 7,529 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த மரணங்களின் எண்ணிக்கை 242.

கடந்த 24 மணி நேரத்தில் 18,044 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், சோதனைகளின் மொத்த எண்ணிக்கை 1,79,374-க உயர்ந்துள்ளது.

மருத்துவ ஆய்வகத்திற்காக மட்டும் ரேபிட் டெஸ்ட் சோதனை  பயன்படுத்த வேண்டும் என்ற  உலக ஆராய்ச்சி அமைப்பின்  பரிந்துரை குறித்த கேள்விக்கு பதிலளித்த டாக்டர் கங்ககேத்கர்,“ ஒரு நபர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா? வைரஸ் இன்னும் அவரது உடலுக்குள் இருக்கிறதா ? போன்ற கேள்விகளுக்கான  பதிலை விரைவாக இந்த சோதனையின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் ஒரு பெரிய ஹாட்ஸ்பாட் பகுதியில், வைரஸ்  பரவலின் தன்மை குறித்து நம்மால் யூகிக்க முடிகிறது. இது முதல் தலைமுறை சோதனை. இது காலப்போக்கில் சிறப்பாக வரும்" என்று தெரிவித்தார்.

ஐ.சி.எம்.ஆர் ஆய்வுகள் என மேற்கோள் காட்டி ,"21 நாட்கள் பொது முடக்கத்தை அமல்படுத்தாவிட்டால், இந்தியாவில் ஏப்ரல் 15-க்குள் 8 லட்சம் மக்கள் கோவிட்- 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற  இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் முன்னதாக மறுத்திருந்தது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர்  லாவ் அகர்வால் கூறுகையில்,"வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டது ஒரு முழுமையான ஆய்வு அல்ல. பொது முடக்கம் இல்லாத சூழலில்  வைரஸ் தொற்றின் வளர்ச்சி விகித அடிப்படையில், கோவிட்- 19 பரவலின் போக்கை கணிக்கின்ற ஒரு கணித மாடலிங்" என்று தெரிவித்தார்.

21 நாட்கள் பொது முடக்க காலத்திற்கு முன்பு, இந்தியாவின் அதிகப்படியான ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம்  ( Peak cumulative growth rate) 41%-க  இருந்தது. இந்த வேகத்தில் பார்த்தல், ஏப்ரல் 15 அன்று, 8.2 லட்ச மக்கள் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்திருக்கலாம். பொது முடக்க காலத்திற்கு பின்பு, வளர்ச்சி விகிதம் 29% ஆக குறைந்ததன் காரணமாக, இன்று இந்தியாவின் எண்ணிக்கை 7,447ஆக  உள்ளது.

தொற்றின் வளர்ச்சி விகிதம் 29% ஆக என்று எடுத்துக் கொண்டு, பொது முடக்கநிலை அறிவிக்கப்படாமால், வெறும் தடுப்பு நடவடிக்கை மட்டும் செய்து வந்திருந்தால், இன்று இந்தியாவில் 45,000 வழக்குகள் பதிவாகியிருக்கும். ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள், அது 1.2 லட்சமாக அதிகரித்திருக்கும்....... ஆனால், இது ஒரு மாடலிங் பயிற்சி தான். முறையான அறிவியல் ஆய்வு கிடையாது. இதற்கும் ஐசிஎம்ஆர்-க்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தார்.

கோவிட்- 19 ஆயத்த நிலை குறித்து கூறுகையில், 1,04,613 தனிமைப்படுத்தலுக்கான  படுக்கை வசதிகள் ,11,836 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள்,   586 கோவிட் சிகிச்சைக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் தயாராக உள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், படிப்படியாக அணுகும் நடைமுறையின்படி, முக்கியமான பொருள்களுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் சுகாதார அலுவலர்களுக்கான தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடை, N-95 முகக்கவச உறைகள், மருத்துவப் பரிசோதனை உபகரணத் தொகுப்புகள், மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் போதிய அளவு கிடைக்கச் செய்வதும் இதில் அடங்கும் என்று தெரிவித்தார்

முன்னதாக, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேங்களிலும் உள்ள காவல்துறை அதிகாரிகள், அந்தந்தப்பகுதிகளின் சிகிச்சை மையங்களிலும், கொரொனா பரவலைத் தடுப்பதற்காக மருத்துவர்கள் பல்வேறு இடங்களைப் பார்வையிடச் செல்லும் போதும் தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அறிவுறுத்தியது.

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment