மாஸ்க் பயன்பாடு குறைவு... ஆபத்து மண்டலத்தில் இந்தியா... மத்திய அரசு எச்சரிக்கை

Omicron Virus In India : ஓமிக்ரானுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் சோதனையை இந்தியா விரைவில் தொடங்கும்

Omicron Virus In India : ஓமிக்ரானுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் சோதனையை இந்தியா விரைவில் தொடங்கும்

author-image
D. Elayaraja
New Update
மாஸ்க் பயன்பாடு குறைவு... ஆபத்து மண்டலத்தில் இந்தியா... மத்திய அரசு எச்சரிக்கை

Tamil Omicron Update In India : ஆப்பிரிக்க நாடுகளின் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் உருமாறிய ஒமைக்ரான் தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றின் 2-து அலைக்கு முந்தைய பயன்பாட்டை விட தற்போது மாஸ்க் பயன்படுத்துவது குறைந்துள்ளதால் இந்தியா அபாய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போ உலகம் முழுவதும் தீவிர தாக்குதலை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகளவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30கோடியை நெருங்கி வருகிறது. மேலும் பல நாடுகளில் கொரோனா தொற்றின் 3-வது மற்றும் 4-வது அலை தொடர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றின் உருமாறிய வகையான ஓமைக்ரான் வைரஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை விட வேகமாக பரவும் திறன்கொண்ட இந்த வைரஸ் குறுகிய நாட்களில் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் தற்போதுவரை இந்தியாவில் 25 பேருக்கு ஒமைக்ரான் வைஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பேருக்கு அறிகுறிகளுடனும், 14 அறிகுறி இல்லாமலும் உள்ளது. அதில் 9 பேர் வெளிநாட்டு தொடர்புகள் இல்லாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள 14 பேர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள். இதன் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இது புதிய மாறுபாட்டால் ஏற்பட்ட முன்னேற்றமான தொற்றுகளைக் குறிக்கிறது. புதிய ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிரான இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் இன்னும் ஆராயப்பட்டு வருவதாக இந்தியாவின் கோவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வி கே பால் குறிப்பிட்டுள்ளார்.. மேலும் அனைவரும் முககவசம் பயன்படுத்துவது "ஒரு உலகளாவிய மற்றும் சமூக தடுப்பூசியாகும், இது எந்த மாறுபாட்டிற்கும் எதிராக பயனுள்ளதாக இருக்கும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisment
Advertisements

மேலும் “நம் நாட்டில் தற்போது நடந்து வரும் முககவசங்களிள் பயன்பாட்டை மதிப்பீடு செய்வதில், உண்மைச் சோதனைக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இது பல நாடுகளுக்கு இந்த மதிப்பீடுகளைச் செய்யும் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் ஏவல்யூஷனிலிருந்து வருகிறது. கொரோனா தொற்றின் 2-வது அலைக்கு முன்பு முககவசம் பயன்படுத்துவது குறைந்த அளவில் இருந்தது. ஆனால் கடந்த மே மாதத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உயரத்தொடங்கிய நிலையில் ​​​​நாம் அனைவரும் பயத்தில் முககவசங்களை அணியத் தொடங்கினோம்.

"ஆகஸ்ட் மாதத்தில், முககவச பயன்பாடு சற்று குறைந்த நிலையில், டிசம்பரில், மீண்டும் அதே நிலைக்கு திரும்பிவிட்டோம். இதன்படி உண்மையில் மார்ச் மாத அளவோடு ஒப்பிடுகையில் முககவசம் பயன்பாடு மேலும் குறைந்துள்ளது. இதனால் தற்போது நாம் ஆபத்து மண்டலத்திற்குள் நுழைந்துவிட்டோம். மேலும் தொழில்நுட்ப ரீதியாக, பாதுகாப்பு திறன் பார்வையில் பார்க்கும்போது இப்போது நாம் குறைந்த மட்டத்தில் செயல்படுகிறோம். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்தான நிலை என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,“நாடு பல கொரோனா தொற்று பாதிப்புகளை பார்த்து வருகிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக இதுபோன்ற 70 கிளஸ்டர்களைப் பார்த்து அவர்களிடம் விசாரித்து வருகிறோம். இது டெல்டா மாறுபாட்டால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளோம். அதனால்தான் தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் மிகவும் முக்கியம். இதனால் பீதியடைய தேவையில்லை, ஆனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.

கொரோனா 2-வது அலைக்கு முன்பு  நாங்கள் அதே மட்டத்தில் இருந்தோம் (முககவசம் பயன்பாடு). ஆனால் திடீரென்று நிலைமை மாறியது. இதனால் முககவசம் பயன்படுத்துவதை நிராகரிக்க இன்னும் நேரம் வரவில்லை என்பதை மீண்டும் எச்சரிக்கிறோம். தடுப்பூசிகள் மற்றும் முககவசங்கள் இரண்டும் மிகவும் அவசியம், ”என்று அவர் கூறினார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்ததன் மூலம் பால் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். "உலகளாவிய சூழ்நிலை, குறிப்பாக ஒமைக்ரான் தொற்று பெரும் கவலையளிக்கிறது. ஒரு மில்லியன் மக்கள்தொகையில் 700 பேருக்கு தொற்று இருப்பதாக இருப்பதாக யூகே தெரிவித்துள்ளது. இது சிறிய எண்ணிக்கையல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாம் அனுபவித்ததை விட இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.

இது டெல்டா வகை தொற்றுகளால் ஏற்படுகிறது., இதில் ஒமைக்ரான் பங்கு அதிகம். தற்போது பிரான்சிலும் காணப்படுகிறது. அமெரிக்காவில் நாளொன்றுக்கு 4-5 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக சூழ்நிலையில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வைரஸ் ஆச்சரியங்களைத் தரக்கூடியது. எனவே, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் முககவசம் என்பது உலகளாவிய மற்றும் சமூக தடுப்பூசியாகும், இது எந்த மாறுபாட்டிற்கும் எதிராக பயனுள்ளதாக இருக்கும், ”என்று அவர் கூறினார்.

ஐசிஎம்ஆர் தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா, கூறுகையில், ஓமிக்ரானுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் சோதனையை இந்தியா விரைவில் தொடங்கும்.“இந்த நேரத்தில், இந்தியாவில், ஓமிக்ரானின் பாதிப்பு 25 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது புனேவில் இருந்து இந்த வைரஸ் தொற்றின் மாதிரிகளை பெற்று வைரஸை வளர்க்க முயற்சிக்கிறோம்… அதற்கு தடுப்பூசி போடுகிறோம். அது வளரும். வைரஸ் வளர்ந்தவுடன், ஆய்வகத்தில் சோதனை செய்யலாம். அதன் பின்னர் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டின் செயல்திறனையும் சோதிப்போம். இதற்காக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மருத்துவ ரீதியாக, ஒமைக்ரான் இன்னும் சுகாதார அமைப்பில் ஒரு சுமையை ஏற்படுத்தவில்லை. "இருப்பினும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உலகளாவிய சூழ்நிலைகளைக் கண்காணிக்க வழக்கமான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சோதனை தொற்று பாதிப்பு 5 சதவீதத்திற்கு மேல் இருக்கும் இடங்களில் மாவட்ட அளவிலான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. மேலும், நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான அறிவியல் சான்றுகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. தற்போது சிகிச்சை முறை மாறாமல் உள்ளது.

பூஸ்டர் டோஸ்களை நிர்வகிப்பதற்கான சிக்கலை இந்தியா இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசிக்குப் பிறகு 9 மாதங்களுக்கும் மேலாக ஆன்டிபாடி எதிர்வினை தொடர்கிறது என்பதை தற்போதைய தரவு காட்டுகிறது. "தடுப்பூசியின் செயல்திறனில் மூன்று அம்சங்கள் உள்ளன: ஆன்டிபாடி பதில், செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மியூகோசல் நோய் எதிர்ப்பு சக்தி. இதில் செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மியூகோசல் நோய் எதிர்ப்பு சக்தியை அளவிடுவது கடினமானது, விலை உயர்ந்தது மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

ஆனால் ஆன்டிபாடி பதிலை நம்மால் அளவிட முடியும். ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தடுப்பூசிகள் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று தரவு காட்டுகிறது. இது தடுப்பூசிகளின் வகையைப் பொறுத்தது, "ஆன்டிபாடி பதில் வீழ்ச்சியடைந்தாலும், தடுப்பூசிகள் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நோய்த்தொற்றுக்குப் பிறகும் பலருக்கு ஒரு வருடத்திற்குப் பிறகும் ஆன்டிபாடி எதிர்வினை தொடர்வதை நாம் பார்த்திருக்கிறோம். அதை விரிவுபடுத்தி, ஒன்பது மாதங்கள் என்று சொல்லலாம். இப்போது, ​​செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மியூகோசல் நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கிறது. இதன் மூலம் நாம் இன்னும் பாதுகாப்பைப் பெற முடியும், ”என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: