Advertisment

இரவில் துப்புரவு தொழிலாளி... பகலில் அறிஞர்... முனைவர் பட்டம் பெற இங்கிலாந்து செல்லும் இளைஞர்

பிஎம்சியின் துப்புரவுத் துறையில் மோட்டார் ஏற்றியாகப் பணிபுரிந்த மயூர் ஹீலியாவின் தந்தை, நீண்டகால நோயினால் இறந்தார்.

author-image
WebDesk
New Update
Mayur-Helia

பாந்த்ராவில் உள்ள பிஎம்சி (BMC ) 'லோடர் சௌகி'யில் மயூர் ஹீலியா

துப்புரவு தொழிலாளியாக வேலை செய்துகொண்டே படித்த இளைஞர் தற்போது முனைவர் பட்டம் பெறவுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

பாந்த்ராவில் உள்ள மோட்டார் லோடர் சௌகி என்ற பகுதியில், துருப்பிடித்த லாக்கர்களைக் கொண்ட இருண்ட அறை, பி ஆர் அம்பேத்கரின் ஃபிரேம் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் அதன் இளஞ்சிவப்பு சுவர்களில் பிளாஸ்டர் உரித்தல் இதுதான், மயூர் ஹீலியா தினமும் இரவு 10 மணிக்கு வேலைக்குச் செல்லும் இடம். இங்கு, அவர் தனது சகாக்களுடன் நியமிக்கப்பட்ட குப்பை லாரிகளில் புறப்படுவதற்கு முன், தனது வருகையை பதிவு செய்வார்.

மயூர் ஹீலியா கடந்த 12 ஆண்டுகளாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் (பிஎம்சி) மோட்டார் லோடராக (வேன்களில் குப்பைகளை கொட்டுபவர்கள்) பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம்  30 வயதை தொடங்கும் ஹீலியா, முழு நிதியுதவியுடன் கூடிய பிஎச்டி படிப்பை தொடர இங்கிலாந்தின் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும்போது முற்றிலும் மாறுபட்ட வழக்கத்தில் அடியெடுத்து வைப்பார், துப்புரவுத் தொழிலாளர்: வரலாற்று மரபுகள் மற்றும் மாற்றும் உண்மைகள்' என்ற தலைப்பில் இவர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக கடந்த மாதம், அவர் பிஎம்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.

பிஎம்சியின் துப்புரவுத் துறையில் மோட்டார் ஏற்றியாகப் பணிபுரிந்த மயூர் ஹீலியாவின் தந்தை, நீண்டகால நோயினால் இறந்தார். அப்போது 18 வயதாக இருந்த மயூர் ஹீலியா, குடும்பத்தின் மூத்த பிள்ளையாக அப்பாவின் சுமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 2010 ஆம் ஆண்டில், கருணை அடிப்படையில் தந்தையின் வேலை ஹீலியாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் தனது தாய், தம்பி மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த போரிவலி மேற்கு பத்மாபாய் சால்லில் உள்ள அறை எண். 5-ஐத் தாண்டி முதல்முறையாக வெளியில் தனது தொழில் அழைத்துச் செல்லும் என்று நினைக்கவில்லை.

12 ஆம் வகுப்பு வாரியங்களில் தோல்வியுற்ற ஹீலியா பெரிய முயற்சிக்குப் பிறகு, எப்படியும் அவரால் அதிக வாய்ப்பை வழங்கியிருக்க முடியாது. ஆனால் வேலையில் அவரது முதல் நாள் ஒரு "திருப்புமுனையாக" இருக்கும். இது குறித்து அவர் கூறுகையில், "இது ஒரு பயங்கரமான ஆரம்பம். பல கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் உள்ள பகுதியிலிருந்து நான் குப்பைகளை எடுக்க வேண்டியிருந்தது. நான் வேலைக்குப் புதியவன் என்பதால், குப்பைத் தொட்டியை எடுத்து டிப் செய்யும் வகையில் எனக்கு திறமை இல்லை. அதனால் சிறிது நேரத்தில் என் உடைகள் முழுவதும் ரத்தம் மற்றும் விலங்கு கழிவுகளால் மாசுபட்டுவிடும்.

எனது வாழ்க்கையில் இது நிச்சயமாக இல்லை என்பதை நான் அப்போதே அறிந்தேன், ”அதன்பிறகு 2012 இல் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு மீண்டும் தயாராகி வெற்றி பெற்றதாக ஹீலியா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்புக்காக மும்பை வில்சன் கல்லூரியில் சேர்ந்த ஹீலியா குத்துச்சண்டையில் ஆர்வமுள்ளவர் மற்றும் பள்ளியில் சில கோப்பைகளை வென்றுள்ளார். அதேபோல்  மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் கோப்பை வென்றுள்ளார். இதனால் குத்துச்சண்டை வளையத்தை வைத்திருக்கும் சில கல்லூரிகளில் வில்சன் கல்லூரிக்கு வருவதில் ஹீலியா மகிழ்ச்சியடைந்தார்.

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை எனது இரவு பணிக்குப் பிறகு, நான் ஒரு கடையில் சாம்பாருடன் சமோசா சாப்பிட்டுவிட்டு வில்சன் கல்லூரியில் காலை விரிவுரைகளில் கலந்துகொள்வேன். நண்பகல் வேளையில் வகுப்புகள் முடிந்ததும், மதிய உணவுக்காக வீட்டிற்குச் சென்று, சிறிது நேரம் உறங்குவேன். பின்னர், மாலை குத்துச்சண்டை பயிற்சிக்காக மீண்டும் கல்லூரிக்கு வருவேன், பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு வெளியே 4-5 வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவேன்,

பின்னர் எனது பணிக்காக லோடர் சௌகிக்குச் செல்வேன். வேலை கல்லூரி படிப்பு இரண்டுமே எனக்கு முக்கியம் நான் இரண்டையும் தவறாமல் செய்ய வேண்டும் என்று கூறும் ஹீலியா, டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வரும் ஒரு வகுப்பு தோழனிடம் இருந்து இதை பற்றி தெரிந்துகொள்கிறார். அதில் இருந்து அவர் தனது வாழ்க்கையை "கண்ணியத்துடன்" நடத்த உதவும் ஒரு பாதையைக் கண்டுபிடிப்பதில் உறுதியாக இருந்ததாக அவர் கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து ஹீலியா டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ்-ல் தலித் மற்றும் பழங்குடியினர் ஆய்வுகளில் சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். அங்கு இருக்கும்போது, அவருடைய பிம்சி (BMC ) சகாக்கள், குப்பை லாரி ஓட்டுநர்கள், தினமும் காலை 5.30 மணியளவில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் வளாகத்தில் என்னை இறக்கி விடுவார்கள் "நான் ஒரு நண்பரின் விடுதி அறையில் சிறிது நேரம் தூங்குவேன். வகுப்புகளுக்குத் தயாராவதற்கு சரியான நேரத்தில் எழுந்திருப்பேன். பயணத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் நான் வீட்டிற்குச் செல்லவில்லை,  என கூறுகிறார் ஹீலியா.

2017 இல் முதுகலைப் படிப்பை முடித்த பிறகு, ஹீலியா டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ்-ல் M.Phil படிப்பைத் தொடர்ந்தார். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ்-ன் இணைப் பேராசிரியரான டாக்டர் ஷைலேஷ்குமார் தரோகர், அவரது வழிகாட்டுதலின் கீழ் மயூர் ஹீலியா தனது M.Phil முடித்தார்,  இது குறித்து பேராசிரியர் டாக்டர் ஷைலேஷ்குமார் தரோகர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில்,

“மயூர் ஹீலியாவின் பின்னணி மற்றும் ஒரு துப்புரவுத் தொழிலாளியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைப் பாதையை ஆராய்வதற்கான அவரது உயர்வு... அவரது பயணம் ஊக்கமளிக்கிறது. அவரது உறுதிப்பாடு நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியதாக இருந்தாலும், அவரது எழுச்சி அவரது சமூகத்தைச் சேர்ந்த பலரை ஊக்குவிக்கும், அவர்கள் இப்போது சிக்கியுள்ள கட்டமைப்பு யதார்த்தத்திலிருந்து வெளியே வரத் துணிவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் தனது மகன் கூறித்து மயூர் ஹீலியாவின் அம்மா சாந்தா ஹெலியா, (55) கூறுகையில், “நான் 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். ஆனால், நான் எப்போதும் என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன், ஏனென்றால் அதுதான் சிறந்த வாழ்க்கைக்கு ஒரே வழி. எனது குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்கும் எனது முடிவுக்கு எனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த காலம் எனக்கு நினைவிருக்கிறது. இன்று எங்களுடன் தங்களை இணைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்கள்” என கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment