இந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் சிதைப்பு... 50 பாகிஸ்தானிய மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

இந்தியாவிற்கு வந்த 50 பாகிஸ்தானிய மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

இந்திய ராணுவ வீரர்கள் இருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்த 50 மாணவர்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பட்டனர்.

அரசு சாரா அமைப்பு ஒன்று பாகிஸ்தானை சேர்ந்த 50 பள்ளி மாணவர்களுக்கு இந்தியா வரும்படி அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, அந்த மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் கடந்த 1-ம் தேதி இந்தியா வந்தடைந்தனர்.

11 முதல் 15 வயதிற்கு உட்பட்ட அந்த மாணவர்கள் ஆக்ரா நகருக்கு செல்லவிருந்தனர். மேலும், பாகிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்வதாக இருந்தது.

இந்த மாணவர்கள் இந்தியாவிற்கு வந்த நாளில் தான் இந்திய வீரர்கள் இருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பாகிஸ்தான் மாணவர்கள் தற்போது இந்தியாவில் இருப்பது, இது சரியாண தருணம் அல்ல என வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த அமைப்பிடம் தெரிவித்தது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்ளே இதை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் மாணவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு அரசு சாரா அமைப்பு வருத்தம் தெரிவித்தது. மேலும், இந்திய மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும், பாதுகாப்பு காரணங்களுக்காவும் அவர்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

×Close
×Close