Advertisment

இந்தியாவில் ட்விட்டரை மூடி விடுவதாக மத்திய அரசு மிரட்டியது; முன்னாள் சி.இ.ஓ குற்றச்சாட்டு

விவசாயிகள் போராட்டத்தின் போது,'இந்தியாவில் ட்விட்டரை மூடுவோம்' போன்ற மிரட்டல்கள் வந்தது. 'ஊழியர்களின் வீடுகளை சோதனை செய்வோம்,' என்றார்கள் என ட்விட்டரின் முன்னாள் சி.இ.ஓ கூறினார்.

author-image
WebDesk
New Update
jack

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, நவம்பர் 12, 2018 அன்று புது தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) டவுன் ஹாலில் மாணவர்களிடம் உரையாற்றுகிறார். REUTERS/Anushree Fadnavis

Soumyarendra Barik 

Advertisment

மத்திய அரசின் மீது வழக்கு

கடந்த ஜூலை 2022ல், மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் சில உள்ளடக்கத்தை அகற்றுமாறு மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், அந்த அழுத்தங்களுக்கு எதிராக ட்விட்டர் சட்ட நடவடிக்கையைத் தொடங்கியது. மத்திய அரசு அதன் எல்லையை மீறி அதிகாரத்தை பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய ட்விட்டர், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69 (A) இன் கீழ் வெளியிடப்பட்ட அமைச்சகத்தின் உள்ளடக்க-தடுப்பு உத்தரவுகளுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், ட்விட்டரின் இணை நிறுவனரும் முன்னாள் முதலாளியுமான ஜாக் டோர்சி, விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் கணக்குகளை முடக்க இந்திய அரசாங்கத்திடம் இருந்து "பல கோரிக்கைகளை" பெற்றதாக மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ட்விட்டர் (Twitter) தளம் "மூடப்படும்" என்று அச்சுறுத்தியதாகவும், நாட்டில் உள்ள அதன் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதாக மிரட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜாஜ் டோர்சியின் குற்றச்சாட்டுகளுக்கு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளிக்கையில், ஜாக் டோர்சி தலைமையின் கீழ், ட்விட்டர் "இந்திய சட்டத்தை மீண்டும் மீண்டும் தொடர்ந்து மீறியது" என்றும் சில நேரங்களில் "ஆயுதப்படுத்தப்பட்ட தவறான தகவல்களை" கொண்டிருந்தது என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள்: கோவின் தரவுகள் ‘கசிவு’: நீதிமன்ற விசாரணை கோரும் எதிர்க்கட்சிகள்

ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க்கும் இந்தியாவின் சமூக ஊடக விதிமுறைகளைப் பற்றி இதேபோன்ற பார்வையைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, முன்பு விதிமுறைகளை "கடுமையானது" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த ஆண்டு ஏப்ரலில், ட்விட்டர் ஊழியர்களை சிறைக்கு அனுப்பும் அபாயத்தை விட, அரசாங்கத்தின் தடை உத்தரவுகளுக்கு இணங்குவதாக எலன் மஸ்க் கூறியிருந்தார்.

எலன் மஸ்க் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 ஐக் குறிப்பிடுகிறார், இதன் கீழ் சமூக ஊடக நிறுவனங்களின் மூத்த பிரதிநிதி அதாவது தலைமை இணக்க அதிகாரி என்று அழைக்கப்படுபவர், விதிமுறைகளை மீறியதற்காக சிறையில் அடைக்கப்படலாம்.

'நீங்கள் பின்பற்றாவிட்டால் நாங்கள் உங்களை மூடுவோம்'

திங்கள்கிழமை இரவு யூடியூப் சேனலான பிரேக்கிங் பாயிண்ட்ஸுக்கு அளித்த பேட்டியின் போது, ​​ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது வெளிநாட்டு அரசாங்கங்களிலிருந்து தனக்கு வந்த அழுத்தங்கள் குறித்து கேட்டபோது, ​​​​"விவசாயிகள் போராட்டம் நடந்தப்போது எங்களிடம் பல கோரிக்கைகளை வைத்த நாடு இந்தியா. அரசாங்கத்தை விமர்சிக்கும் குறிப்பிட்ட பத்திரிகையாளர்களின் கணக்குகளை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டது, அது 'இந்தியாவில் ட்விட்டரை மூடுவோம்' போன்ற மிரட்டல் வழிகளில் வெளிப்பட்டது, இந்தியா எங்களுக்கு மிகப் பெரிய சந்தையாகும்; 'உங்கள் ஊழியர்களின் வீடுகளை நாங்கள் சோதனை செய்வோம்,' என்றார்கள், அதை அவர்கள் செய்தார்கள்; "நீங்கள் இதைப் பின்பற்றவில்லை என்றால் நாங்கள் உங்கள் அலுவலகங்களை மூடுவோம்," இது இந்தியா, ஒரு ஜனநாயக நாடு" என்றும் கூறினார்கள், என்று கூறினார்.

2021 ஆம் ஆண்டில் நாட்டில் விவசாயிகளின் எதிர்ப்பின் உச்சக்கட்டத்தில், "காலிஸ்தான்" தொடர்புடையவை எனக் கூறப்படும் கிட்டத்தட்ட 1,200 கணக்குகளை அகற்றுமாறு ட்விட்டரை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதற்கு முன், 250 க்கும் மேற்பட்ட கணக்குகளை அகற்றுமாறு ட்விட்டரிடம் கேட்டிருந்தது.

ட்விட்டர் சில கணக்குகளைத் தடுப்பதன் மூலம் பதிலளித்தது, ஆனால் பின்னர் அவற்றின் தடையை நீக்கியது, இது தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை எரிச்சலடையச் செய்தது. பின்னர் தனது பதிலில், ட்விட்டர் தனது தளத்தில் பேச்சு சுதந்திரத்தை மேற்கோள் காட்டி இந்த கணக்குகளை முடக்க மறுத்துவிட்டது. எவ்வாறாயினும், இந்த பதில் அரசாங்கத்துடன் நன்றாகப் போகவில்லை, ட்விட்டர் "நீதிமன்றத்தின் பங்கை நாட முடியாது மற்றும் இணங்காததை நியாயப்படுத்த முடியாது" என்று அரசாங்கம் கூறியது.

மே 2021 இல், பிரதமரையும் மத்திய அரசையும் "ஊடகங்களை கையாளுகின்றன" என்று அவதூறு செய்ய காங்கிரஸ் சதி செய்ததாகக் குற்றம் சாட்டிய, ஆளும் கட்சித் தலைவர்களின் சில ட்வீட்களை ட்விட்டர் சுட்டிகாட்டிய சில நாட்களுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, ட்விட்டர் இந்தியாவின் டெல்லி மற்றும் குர்கான் அலுவலகங்களில் நோட்டீஸை வெளிப்படையாக வழங்கின.

ஜாக் டோர்சியின் ‘அப்பட்டமான பொய்’: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

ஜாக் டோர்சியின் கூற்றுகளுக்கு பதிலளித்த சந்திரசேகர், 2020 முதல் 2022 வரை மீண்டும் மீண்டும் சட்டத்திற்கு இணங்கவில்லை என்ற போதிலும், ட்விட்டரில் இருந்து யாரும் சிறைக்கு செல்லவில்லை அல்லது தளத்தை "முடக்கவில்லை", ஜூன் 2022 இல் மட்டுமே ட்விட்டர் விதிமுறைகளுக்கு இணங்கியது” என்று கூறினார்.

“ஜாக் டோர்சி ட்விட்டர் தலைமைப் பொறுப்பில் இருந்தப்போது இந்திய சட்டத்தின் இறையாண்மையை ஏற்பதில் சிக்கல் இருந்தது. இந்தியாவின் சட்டங்கள் இதற்குப் பொருந்தாதது போல் நடந்துகொண்டது” என்று சந்திரசேகர் கூறினார். "ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இந்தியாவிற்கு அதன் சட்டங்கள் இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய உரிமை உண்டு." என்று அமைச்சர் கூறினார்.

2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தின் போது, ​​"நிறைய தவறான தகவல்கள் மற்றும் இனப்படுகொலை அறிக்கைகள் நிச்சயமாக போலியானவை" என்பதால், அகற்றுவதற்கான உத்தரவுகளை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு "கடமை" உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

"ஜாக் டோர்சியின் தலைமையின் கீழ் ட்விட்டரில் பாகுபாடான நடத்தையின் அளவு இருந்தது, அமெரிக்காவில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தபோது அவர்களே அதைச் செய்தபோது, ​​இந்தியாவில் ட்விட்டர் தளத்தில் இருந்து தவறான தகவல்களை அகற்றுவதில் அவர்களுக்கு சிக்கல் இருந்தது," என்று அமைச்சர் கூறினார்.

ஆன்லைன் தணிக்கையின் வளர்ந்து வரும் போக்கு

2014 மற்றும் 2020 க்கு இடையில் ட்விட்டரில் இருந்து உள்ளடக்கத்தை அகற்ற இந்தியா அரசாங்கம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் இருந்து சட்டக் கோரிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது, என இந்தியன் எக்ஸ்பிரஸின் ட்விட்டரின் உலகளாவிய வெளிப்படைத்தன்மை அறிக்கைகளின் பகுப்பாய்வு முன்னர் காட்டியது. தற்செயலாக, அதே காலகட்டத்தில், சமூக ஊடக நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உள்ளடக்கத் தடுப்பு உத்தரவுகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 2,000 சதவீதம் அதிகரித்துள்ளது, நாடாளுமன்றத்தில் பகிரப்பட்ட தரவு, இந்தியாவில் ஆன்லைன் தணிக்கையின் வளர்ந்து வரும் போக்கை எடுத்துக்காட்டுகிறது.

2021 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 4,900க்கும் மேற்பட்ட ட்வீட்களைத் தடுக்குமாறு பல்வேறு இந்திய நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்கத்தால் ட்விட்டரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது, அப்போது நடந்துகொண்டிருந்த விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் கோவிட்-19-ஐ அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும் சில ட்வீட்களை அகற்றுமாறு அரசாங்கத்திடம் இருந்து நிறுவனம் உத்தரவுகளைப் பெற்றதையடுத்து "ஆத்திரமூட்டும்" ட்வீட்களைப் பகிர்வது தொடர்பாக 250 க்கும் மேற்பட்ட கணக்குகளை நிறுவனம் முடக்கியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Twitter India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment