/tamil-ie/media/media_files/uploads/2017/05/a319.jpg)
சமீபகாலமாக பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. இதில், பல இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா சரியான பதிலடி தர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கடும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
#WATCH Pakistani posts destroyed by Indian Army in Nowshera (Jammu and Kashmir) pic.twitter.com/whrWb0wMfg
— ANI (@ANI_news) 23 May 2017
இந்நிலையில், இன்று பாகிஸ்தான் பதுங்கு குழிகள் மீது இந்திய ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஷ்மீர் எல்லைப்பகுதிகளான ரஜோரி, நவ்ஷேரா உள்ளிட்ட பகுதிகளில் இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எல்லை தாண்டிய ஊடுருவலைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மேஜர் ஆசோக் நரூலா தெரிவித்துள்ளார். மேலும், இந்திய வீரர்களைக் கொன்றதற்கான பதிலடியாகவும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.