கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார் டெல்லியில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக வளர்ச்சி பெற்று வருகிறது.
பாரத் மாலா என்ற பெயரில் 2000 கி.மீ தூர கடற்கரை சாலை திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 34800 கிமீ தூரத்திற்கு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.5,35 லட்சம் கோடி முதலீட்டை ஈர்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது என்பது மிகப்பெரிய சீர்திருத்தமாகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது கருப்பு பணத்தை ஒழிக்க உதவியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பொதுத்துறை வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரித்துள்ளது. மேலும், அடிப்படை கட்டமைப்புகளுக்காக மத்திய அரசு அதிக அளவு செலவிட திட்டமிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அதிகரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றார்.