இந்தியன் ரயில்வேஸில் ஏஜெண்டாகி மாதம் ரூ. 80 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா?

IRCTC Recruiting Rail Travel Service Agent (RTSA) For Online Booking : எல்லோருக்குமே இது ஒரு பொன்னான வாய்ப்பு.

Indian Railway Ticketing Booking agent : வேலை தேடி அலைபவர்களுக்கு பார்ட் டைம் ஜாப் வேண்டுமென்று நினைப்பவர்கள் எல்லோருக்குமே இது ஒரு பொன்னான வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதீங்க. இந்தியன் ரயில்வேஸ் நீங்கள் மாதம் ரூ. 80 ஆயிரம் வரை சம்பாதிக்க உங்களுக்கு உதவ முன் வராங்க நீங்க ரெடியா?

எப்படி தெரியுமா? ரயில்வேதுறை உடன் இணைந்து ஆன்லைனில் நீங்களும் டிக்கெட் புக் செய்தால் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். அதற்கு நீங்கள் இந்தியன் ரயில்வேஸ் கீழ் செயல்பட்டு வரும் ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் புக்கிங் ஏஜெண்ட் ஏஜெண்டாக மாற வேண்டும்.

How to become an IRCTC Agent : ஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங் ஏஜெண்ட்!

1. முதலில் ஐஆர்சிடிசி ஏஜெண்டாக மாற அதற்கான உரிமையை பெற வேண்டும். பின்பு உரிமையைப் பெறுபவர்கள் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட் சேவை வழங்கி அதில் கமிஷன் தொகையைப் பெற முடியும்.

2. இதற்கு நீங்கள்  ரயில் டிராவல் சர்வீஸ் ஏஜெண்ட்  உரிமை பெற ஐஆர்சிடிசிக்கு ஒரு முறை கட்டணமாக 20,000 ரூபாயை செலுத்த வேண்டும். அதில் 5,000 ரூபாய் திருப்பி அளிக்கக் கூடிய டெபாசிட்டாக இருக்கும். இந்த சேவையைத் தொடர்ந்து வழங்க ஆண்டுக்கு 5,000 ரூபாயை கட்டணமாக ஐஆர்சிடிசிக்கு செலுத்த வேண்டும்.

வெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க!

3. நடைமுறைகள்:

100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் மூலம் இதற்கான ஒப்பந்தம் போடப்படும். பின்னர்,  டிமாண்ட் டிராஃப்ட் மூலம் 20,000 ரூபாய் ஒரு முறை பதிவு கட்டணம் செலுத்திவிட்டால் போதும் நீங்கள் ஏஜெண்டாகிவிடலாம்.

4. தேவையான ஆவணங்கள்.

பான் கார்டு, வருமான வரி தாக்கல் விவரங்கள், முகவரி சான்றிதழ்

5. மாதம் 80 ஆயிரம்:

நீங்கள் ஏஜெண்டாக மாறிய பிறகு ஸ்லீப்பர் டிக்கெட் புக் செய்தால் 30 ரூபாயும், ஏசி டிக்கெட் என்றால் 60 ரூபாயும் கமிஷன் கிடைக்கும். குறைந்தது 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை ரயில் டிக்கெட்களுக்கு கமிஷன் வழங்கப்படும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close