Advertisment

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
PSLV, ISRO

29 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்தபின்னர் பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

Advertisment

கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டது. அதன்படி 7 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுவிட்டன.

முன்னதாக, முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுட்காலம் நிறைவடையவுள்ள நிலையில், புதியதாக செயற்கைக்கோளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து,, 1,425 கிலோ எடைகொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

இந்த செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்படும், இந்த ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று 7 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய தயாராகி வருகிறது. ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த செயற்கைகோள் மூலம், இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Isro Pslv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment