இது குறித்து இன்டிகோ தெரிவித்ததாவது: திவாகர் ரெட்டியிடம் விமான ஊழியர் பண்பாக நடந்து கொண்டனர். 6இ-608 விமானத்தில் பயணிகளை ஏற்றுவது என்பது ஏற்கெனவே முடிந்துவிட்டது. அடுத்து வரும் விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்து தரப்படும் என கூறப்பட்டது. ஆனால் திவாகர் ரெட்டி ஆத்திரம் அடைந்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மோசமாக நடந்து கொண்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த போலீஸார் திவாகர் ரெட்டியை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனாலும் அவர் சமாதனம் அடையவில்லையாம். பின்னர் இன்டிகோ விமான நிலைய கவுண்டர் பக்கம் சென்ற திவாகர் ரெட்டி, அங்கிருந்த பிரிண்டரை பிடித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், கீழே விழுந்த பிரிண்டர் சேதம் அடைந்ததுள்ளது என அந்த விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதனால், மோசமாக நடந்து கொண்ட எம்.பி திவாகர் ரெட்டிக்கு விமான சேவை வழங்க தடைவிதிக்கப்படுவதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன.
விமானத்தில் பயணம் செய்வதற்காக தாம் முன்னதாக வந்த போதிலும், பயணம் செய்ய மறுப்பு தெரிவித்து எம்.பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எம்.பி விமானத்திற்கு வருவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் பயணிகளை விமானத்தில் ஏற்றுவது நிறுத்தப்பட்டது என்று விமான நிறுவனத்தில் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக சிவசேனா எம்.பி ரவிந்ரா கய்க்வாத் இதே போன்ற சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.