சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லக்னோவில் நடைபெற்ற யோகா நிகழ்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு யோகா செய்தார்.
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி
இன்று 3-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ராம்பாய் மைதானத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் அவர்களுடன் இணைந்து பிரதமர் நேரந்திர மோடி யோகா செய்தார். இந்த நிகழ்ச்சியில் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதியத்யநாத் கலந்து கொண்டு யோகா செய்தார்.
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி “இந்தியா மட்டுமல்லால் மற்ற நாடுகளிலும் யோகாவின் தேவையும், மதிப்பும் உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் யோகா மையங்களின் எண்ணிக்கை மற்றும் யோகா ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.