Advertisment

சுஷ்மா ஸ்வராஜின் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பு - பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல்

irremediable loss: LK Advani condoles Sushma Swaraj’s demise: சுஷ்மா ஸ்வராஜின் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sushma Swaraj News

Sushma Swaraj News

irremediable loss: LK Advani condoles Sushma Swaraj’s demise: முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67. அவரது இறுதிச் சடங்குகள் டெல்லியில் உள்ள லோதியில் நடைபெற உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், சுஷ்மா ஸ்வராஜின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார். “நாடு ஒரு முக்கியமான தலைவரை இழந்துள்ளது. நான் சுஷ்மா ஸ்வராஜின் இழப்பால் மிகவும் வருந்துகிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.” என்று எல்.கே.அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

பெண் தலைவர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் முன்மாதிரி

மேலும், எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வாராஜைப் பற்றி நினைவு கூறுகையில், தான் கட்சியின் தலைவராக இருந்தபோது, சுஷ்மா ஸ்வராஜ் நம்பிக்கைக்குரிய இளம் செயல்பாட்டாளராக சேர்க்கப்பட்டார். “அவர் எங்கள் கட்சியின் மிகவும் பிரபலமான மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். உண்மையில், பெண் தலைவர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரை ஒரு புத்திசாலித்தனமான சொற்பொழிவாளர் என்று கூறும் அத்வானி, அவர் சம்பவங்களை நினைவு கூர்ந்து அவற்றை மிகத் தெளிவுபடுத்தும் சுஷ்மாவின் திறனைக் கண்டு வியப்படைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர் தன் அரவணைப்பு மற்றும் இரக்க குணத்தால் அனைவருடைய மனதையும் தொட்டார் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார். சுஷ்மா ஸ்வராஜ் எனது பிறந்தநாளில் எனக்கு பிடித்த சாக்லேட் கேக்கை கொண்டு வருவதை அவர் தவறவிட்டதாக ஒரு ஆண்டு கூட எனக்கு நினைவில்லை” என்று அத்வானி நினைவு கூர்ந்துள்ளார்.

பிரதமர் மோடி அஞ்சலி

மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, "இந்திய அரசியலில் ஒரு புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. தனது வாழ்க்கையை பொது சேவைக்காகவும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அர்ப்பணித்த ஒரு முக்கிய தலைவரின் மறைவுக்கு இந்தியா வருந்துகிறது. சுஷ்மா ஸ்வராஜ் மிகவும் இரக்க குணம் உடையவர். அவர் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்தார்”என்று கூறினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “திருமதி சுஷ்மா ஸ்வராஜ் காலமானதைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். பொது வாழ்வில் கண்ணியம், தைரியம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காட்டிய, மிகவும் நேசித்த ஒரு தலைவரை நாடு இழந்துவிட்டது. அவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருந்தார். அவர் இந்திய மக்களுக்கு செய்த சேவைக்காக எப்போதும் நினைவுகூறப்படுவார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு மாநிலங்களவையில் இரங்கல்

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவித்தார். “அவரது அகால மறைவால் தேசம் ஒரு திறமையான நிர்வாகியையும், திறமையான நாடாளுமன்ற உறுப்பினரையும், மக்களின் உண்மையான குரலையும் இழந்துள்ளது.” என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவிக்கையில், “சுஷ்மா ஸ்வராஜ் ஒரு அசாதாரண அரசியல் தலைவர். ஒரு திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஒரு நிகரில்லா நாடாளுமன்ற உறுப்பினர். சுஷ்மா ஸ்வராஜின் மறைவு செய்தியால் நான் அதிர்ச்சியடைகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “சுஷ்மா ஸ்வராஜ் திடீரென காலமான செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். 1990-களில் இருந்து நான் அவரை அறிவேன். எங்கள் சித்தாந்தங்கள் வேறுபட்டிருந்தாலும், நாங்கள் நாடாளுமன்றத்தில் பல நல்ல நேரங்களை பகிர்ந்து கொண்டோம். ஒரு சிறந்த அரசியல்வாதி, தலைவர், நல்ல மனிதர். அவரை இழந்துள்ளேன். அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுக்கு இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment