ரூ.100 கோடி சொத்து, 3 வயது மகளைவிட்டு துறவறம் செல்லும் ஜெயின் தம்பதி

மத்திய பிரதேச மாநிலத்தில், 3 வயது பெண் குழந்தை மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைவிட்டு, ஜெயின் சமூகத்தை சேர்ந்த தம்பதியினர் துறவறம் செல்கின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில், 3 வயது பெண் குழந்தை மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைவிட்டு, ஜெயின் சமூகத்தை சேர்ந்த தம்பதியினர் துறவறம் செல்கின்றனர்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jain couple,monkhood,Bharatiya Janata Party,monks,renunciation

மத்திய பிரதேச மாநிலத்தில், 3 வயது பெண் குழந்தை மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விட்டுவிட்டு, ஜெயின் சமூகத்தை சேர்ந்த தம்பதியினர் துறவறம் செல்ல உள்ளனர்.

Advertisment

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் சுமித் ரத்தோர் (வயது 35) மற்றும் அனாமிகா (வயது 34). இவர்களுக்கு மூன்று வயதில் இப்யா என்ற மகள் உள்ளார். ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்களான இவர்களது குடும்பம் அரசியல் மற்றும் தொழிலில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். இவர்களுக்கு 100 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளன.

இந்நிலையில், தம்பதிகள் இருவரும் துறவறம் செல்ல முடிவெடுத்துள்ளனர். இது அவர்களது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர்கள் இருவரும் வரும் 23-ஆம் தேதி சுதமார்கி ஜெயின் ஆச்சார்யா ராம்லால் மகராஜ் என்பவரிடம் தீட்சை வாங்க இருக்கின்றனர்.

Advertisment
Advertisements

தன் மகளின் இந்த முடிவு குறித்து பேசிய அவரது தந்தை அசோக் சாண்டில்யா, “அவர்களை சமாதானம் செய்ய முடியவில்லை. மதம் அழைக்கும்போது அவர்களை யாராலும் தடுக்க முடியாது. என் பேத்தியை நான் வளர்த்துக் கொள்வேன்”, என கூறினார். இவர் நீமுச் மாவட்டத்தின் முன்னாள் பாஜக தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சுமித் ரத்தோரின் தந்தை ராஜேந்திர சிங் ரத்தோர், “இந்த முடிவை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு விரைவில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.”, என கூறினார். இவர் சிமெண்ட் தொழிலில் பெரும் செல்வந்தர் ஆவார்.

இவர்களது மகள் இப்யா, 8 மாத குழந்தையாக இருக்கும்போதே துறவறம் செல்ல முடிவெடுத்து

இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: