கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளின்படி, நாடு முழுவதும், சோதனை முயற்சியாக, இன்று(மார்ச் 22) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 'மக்கள் ஊரடங்கு' நடத்தப்படுகிறது.
Advertisment
தமிழகத்தில், மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்கு துவங்கியது. இந்த ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் அரசு பஸ்கள் ஓடாது என தமிழக அரசு அறிவித்தது. கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்கள் அடைக்கப்பட்டிருக்கும் என அதன் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதன்படி, அரசு பஸ்கள் இயங்கவில்லை. ரயில்களும் இயக்கப்படவில்லை. ஓட்டல்கள், மார்க்கெட்கள், கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
வெறிச்சோடி கிடக்கும் சென்னை கோயம்பேடு சந்தை
சென்னை டைடல் பார்க் சாலை
மதுரை - திண்டுக்கல் பைபாஸ் சாலை
சென்னை வெறிச்சோடிய சாலைகளில் விளையாடி மகிழும் சிறுவர்கள்
போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள அடையார் பாலம்
சென்னை நேப்பியர் பாலம்
சென்னை விமான நிலையம்
சென்னை சென்ட்ரல் பகுதி
வெறிச்சோடி கிடக்கும் மும்பை ஹாஜி அலி சாலை
எர்ணாகுளம் ரயில்வே ஜங்சன்
எர்ணாகுளம் மெயின் மார்க்கெட்
திருவனந்தபுரம் பத்மாநாபசுவாமி கோயில்
பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு அழைப்பிற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் இந்த ஊரடங்கு உத்தரவு 23ம் தேதி காலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற http://t.me/ietamil