இந்திய சுதந்திர போராட்டம் முதலே நாட்டில் அரசியல் செல்வாக்கு அதிகம் உள்ள குடும்பம் நேருவின் குடும்பம். ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர். ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது மனைவி கமலா நேரு ஆகியோர் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள்.
ஜவஹர்லால் நேரு - கமலா நேரு தம்பதிகளின் மகளான இந்திரா காந்தி இந்திய பிரதமரானார். அதன்பின், தன் பாதுகாவலர்களால் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு அவருடைய மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார்.
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் அவரது மனைவி சோனியா காந்தி தீவிர அரசியலில் இறங்கினார். இவர்களது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
அரசியல் செல்வாக்கு மிக்க நேரு குடும்பத்தின் கல்வியறிவு குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஜவஹர்லால் நேரு:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/download-1-2-300x166.jpg)
இயற்கை அறிவியல் துறையில் ட்ரிப்போஸ் எனப்படும் பி.ஏ.பட்டத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
இந்திரா காந்தி:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/indiragandhi759-300x167.jpg)
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், சோமர்வில்லில் நவீன வரலாறு படித்தவர். ஆனால், இப்பட்டப் படிப்பை இந்திரா காந்தி முழுமையாக முடிக்கவில்லை.
ஃபெரோஸ் காந்தி:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/writer-759-300x167.jpg)
ஈவிங் கிரிஸ்துவக் கல்லூரியில் பட்டம் பயின்றவர்.
ராஜீவ் காந்தி:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/rajiv-med-300x167.jpg)
லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் இயந்திர பொறியியல் படித்தவர்.
சோனியா காந்தி:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/M_Id_413039_Gandhi-300x182.jpg)
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மொழிகள் (ஆங்கிலம், ஃபிரெஞ்சு) பட்டம் படித்தவர்.
சஞ்சய் காந்தி:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/download-2-2.jpg)
கல்லூரிக்கு செல்லவில்லை. ஆட்டோமொபைல் பொறியியல் படித்தவர். இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் அப்ரெண்டிசாக படித்தவர்.
மேனகா காந்தி:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/download-3-300x166.jpg)
லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பட்டம் படித்தவர்.
ராகுல் காந்தி:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/download-4-300x166.jpg)
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ட்ரினிட்டி கல்லூரியில் வளர்ச்சி பொருளாதாரத்தில் எம்.பில் பட்டம் பட்டம் முடித்தவர்.
பிரியங்கா காந்தி:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/priyanka-gandhi-300x167.jpg)
ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில் சைக்காலஜி பாடப்பிரிவில் பட்டம் பயின்றவர்.
வருண் காந்தி:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/download-5-300x166.jpg)
லண்டன் பல்கலைக்கழகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலுக்கான லண்டன் பள்ளியில் பி.எஸ்சி. (ஹானர்ஸ்) எக்கனாமிக்ஸ் பயின்றவர்.