பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல், தான் ஜிமிக்கி கம்மல் பாட்டை ரசித்து கேட்டதாகவும், அந்த பாட்டை தான் விரும்புவதகாவும் தெரிவித்துள்ளார்.
Advertisment
ஒணம் பண்டிகையை முன்னிட்டு கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நடிப்பில் வெளிவந்த "வெலிபாடிண்டே புஸ்தகம்" படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் தான் "ஜிமிக்கி கம்மல்". இந்த படம் வெளியீட்டிற்கு முன்பாக "ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச்" என்ற ஒரு சவாலை படக்குழு வெளியிட்டது. அதன்படி, ஜிமிக்கி கம்மல் பாட்டிற்கு நடனமாடி அதனை அனுப்ப வேண்டும். இதனை ஏற்று பலரும் பாடலுக்கு நடனமாடி அனுப்பினர். ஆனால், கேரளாவில் உள்ள ISC கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் ஆடிய டான்ஸ் மட்டும் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தது.
படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை விட கேரள பெண்கள் ஆடிய இந்த டான்ஸ் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டர்கிராம் என சமூக வலைத்தளங்கள் எதை தொட்டாலும், ஜிமிக்கி கம்மல் டான்சை கடக்காமல் இன்றைய தினம் நீங்கள் செல்ல முடியாது. கேரள பெண்களின் இந்த ஜிமிக்கி கம்மல் டான்ஸ், ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளத்தையும் தன் வசம் சுண்டி இழுத்துள்ளது. ஏனெனில், அந்த டான்ஸ் அப்படி!!
Advertisment
Advertisements
இப்படி ஒட்டுமொத்த இந்தியாவும் ஜிமிக்கி கம்மலை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஜிமிக்கி கம்மல் டான்ஸ் ரசிகர் ஒருவர், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மலிடம் உங்களுக்கு "ஜிம்மிக்கி கம்மல்" பாடல் பற்றி தெரியுமா என்று கேட்டுள்ளார். டுவிட்டர் மூலம், "ஹாய் ஜிம்மி கிம்மல், நீங்கள் ஜிமிக்கி கம்மல் பாடலை கேட்டுள்ளீர்களா?" என கேள்வி எழுப்பி டுவீட் செய்ததுடன் கேரளப் பெண்கள் ஆடிய நடனத்தையும் அதில் இணைத்துள்ளார்.
ஜிம்மி கிம்மல், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், நகைச்சுவை நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அப்போது, விழா மேடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை அவர் கிண்டல் செய்தது நினைவிருக்கலாம். "ஜிம்மி கிம்மல் லைவ்" எனும் இவரது இரவு நேர "டாக் ஷோ" மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தகது.