ஐம்மு காஷ்மீரில் 40 மாணவர்களுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து!

பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 40 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஐம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. பள்ளி பேருந்தானது ராகோரியில் உள்ள மான்ஜபோட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனிடையே பூஞ்ச் முகால் சாலையில் பேருந்து செல்லும் போது அங்கிருந்த பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பேருந்தில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படும் நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

×Close
×Close