/tamil-ie/media/media_files/uploads/2017/07/a82.jpg)
Tamil Nadu news live updates
மஹாராஷ்டிர மாநிலத்தில் போலி சாதிச் சான்றிதழை கொடுத்து, அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் மீதும், இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து கல்லூரிகளில் இடம்பிடித்தவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 'போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது' என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மஹாராஷ்டிர மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஜெ.எஸ். கெஹர் மற்றும் டி ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், "போலி சாதிச் சான்றிதழை கொண்டு அரசு பணியில் யாரேனும் சேர்ந்திருந்தாலோ அல்லது இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றிருந்தாலோ சட்டப்படி குற்றமாகும். அப்படி சேர்ந்தவர்களது பணி அல்லது பட்டத்தை உடனடியாகப் பறிக்கலாம். அதோடுமட்டுமில்லாமல், அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும்" என இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் இந்தத் தீர்ப்பை முன்தேதியிட்டு செயல்படுத்த முடியாது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.