நீதிபதி ஜோசப் நியமனம் விவகாரம் மறுபரிசீலனைக்குக் கூடுகிறது கொலீஜியம்!!!

உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பரிந்துரைத்தது குறித்து மறுபரிசீலனை செய்ய கொலிஜியம் அமைப்பு இன்று கூடுகிறது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதி நியமனத்தில் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்திற்கும் இடையே முரண்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையில் நிராகரிக்கப்பட்ட நீதிபதி ஜோசப் நியமனத்தை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு கொலீஜியம் கேட்டுக்கொண்டது. இதன் கூட்டம் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கொலீஜியம் அமைப்பைச் சேர்ந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் பிற நீதிபதிகள் செல்லமெஷ்வர், ரஞ்சன் கோகொய், மதன் லோகுர் மற்றும் குரியன் ஜோசப் ஆகிய 5 பேரும் கூடுகின்றனர்.

இன்று மாலை 4.15 மணி அளவில் கூடும் இந்தக் கூட்டத்தில் ஜோசப் தேர்வு செய்யும் பரிசீலனை நிராகரிக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்படும். முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் கொலீஜியம் அமைப்பு இரண்டு பேரின் பெயர்களை மத்திய அரசிடம் பரிசீத்தது. மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா மற்றும் உத்தரகண்ட் நீதிபதி கே.எம் ஜோசப் ஆகியோரின் பெயரை பரிந்துரை செய்தது. இந்த இருவரில் மத்திய அரசு இந்து மல்ஹோத்ராவை தேர்வு செய்து, ஜோசப் பரிந்துரையை நிராகரித்தது.

இந்நிலையில் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியம் அமைப்புக்குத் தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று அரசின் கருத்து குறித்துப் பரிசீலிப்பதற்காக கொலிஜியம் இன்று கூடுகிறது.

தற்போது நிலவி வழும் இந்த முரண்பாட்டினால், ஜோசப் நீதிபதியாக நியமிக்கப்படும் வரை இனிவரும் காலங்களில் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றத்தின் நியமனத்திற்கு எந்தப் பெயர்களை பரிந்துரை செய்யப்போவதில்லை என்று கொலீஜியம் தெரிவித்துள்ளது.

×Close
×Close