Advertisment

4 மாதங்களில் 8 முறை, ஓராண்டில் பிரதமர் மோடியின் அதிகமான கர்நாடகப் பயணம்

2020 ஜனவரி 2 முதல் ஜூன் 20, 2022 வரை, கர்நாடகாவிற்கு அவர் மேற்கொண்ட இரண்டு பயணங்களுக்கு இடையே 29 மாத இடைவெளி இருந்தது.

author-image
WebDesk
New Update
PM Modi

PM Modi

புராஜெக்ட் டைகரின் பொன்விழாவைக் குறிக்கும் நிகழ்வைத் தொடங்கி வைக்க, பிரதமர் மோடி ஏப்ரல் 9-ஆம் தேதி கர்நாடகாவுக்கு செல்கிறார். நான்கு மாதங்களில் அவர் மாநிலத்திற்கு வருவது இது எட்டாவது முறையாகும். இது 2014-ம் ஆண்டு அவர் பிரதமராக பதவியேற்ற பிறகு, ஓராண்டில் பிரதமர் மோடியின் அதிகமான கர்நாடகப் பயணம் ஆகும்.

Advertisment

ஜனவரி 2015 முதல், மோடி மொத்தம் 32 முறை மாநிலத்திற்கு வந்துள்ளார். இந்த வருகைகளில் ஏறக்குறைய 25 சதவீதம் தேர்தல் ஆண்டில் நடந்தவை.

இந்தியப் பிரதமரின் இணையதள தரவுகளின் படி, 2018 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டின் போது, ஒரே வருடத்தில் அதிகமாக மோடி கர்நாடகாவுக்கு வருகை தந்தார். அந்த ஆண்டு ஏழு வருகைகளில் ஆறு தேர்தல்களுக்கு முன்னதாக நடந்தன.

இவற்றில் ஐந்து வருகைகள் அதிகாரப்பூர்வமற்றவை, அதாவது பிஜேபி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் மாநிலத்திற்குச் சென்றார்.

இந்த ஆண்டும் மோடி பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகராக இருப்பார் மற்றும் அவரது வருகைகள் இரட்டை இலக்கத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பிரதமரின் வருகைகள் பல திட்டங்களின் திறப்பு விழாக்களுடன் தொடர்புடையவை, ஆனால் அவற்றில் பல முழுமையடையவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

2023 ஆம் ஆண்டில், ஜனவரி 12 அன்று அவரது முதல் வருகையின் போது, ஹுப்பள்ளியில் 26 வது தேசிய இளைஞர் விழாவை அவர் தொடங்கி வைத்தார். இரண்டாவது ஒரு வாரம் கழித்து, ஜனவரி 19 அன்று, பஞ்சாரா சமூகத்திற்கான உரிமைப் பத்திரங்களை வழங்க யாத்கிர் மற்றும் கலபுர்கிக்கு வந்தார்.

மூன்றாவது வருகை பிப்ரவரி 6 அன்று பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரத்தின் தொடக்க விழாவாக இருந்தது. நான்காவது பிப்ரவரி 13 அன்று ஏரோ இந்தியா 2023 தொடங்கபட்டது.

ஐந்தாவது விஜயம் பிப்ரவரி 27 அன்று ஷிவமொக்கா விமான நிலையத்தைத் திறந்து வைப்பதற்கும், ஆறாவது மார்ச் 12 அன்று பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலை திறப்பு விழாவிற்கும் வந்தது.

மோடி தனது சமீபத்திய மற்றும் ஏழாவது பயணத்தின் போது, ​​மார்ச் 25 அன்று, ஒயிட்ஃபீல்ட் மெட்ரோ லைனைத் திறந்து வைத்தார், மேலும் பிற நிகழ்வுகளைத் தவிர, தாவாங்கேரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

மார்ச் 2020 மற்றும் ஜூன் 2021 க்கு இடையில் கோவிட்-19 தொற்றுநோய்களின் இரண்டு அலைகளின் போது மோடி ஒரு முறை கூட மாநிலத்திற்குச் செல்லவில்லை என்பதையும் தரவு காட்டுகிறது.

2020 ஜனவரி 2 முதல் ஜூன் 20, 2022 வரை, கர்நாடகாவிற்கு அவர் மேற்கொண்ட இரண்டு பயணங்களுக்கு இடையே 29 மாத இடைவெளி இருந்தது.

தேர்தல் நடைபெறும் மாநிலத்திற்கு பிரதமர் அடிக்கடி வருகை தருவதால், பல கோடி ரூபாய் வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

பிரதமர் பங்கேற்கும் பேரணிகளில் பாஜக தலைவர்கள் பல கோடி ரூபாய் கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் கூறினார். பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே 59 கோடி ரூபாய் செலவில் கெம்பேகவுடா சிலை நிறுவப்பட்டது. அதேசமயம், திறப்பு விழா நிகழ்ச்சிக்கு 30 கோடி ரூபாய் செலவானது.

மேலும், மோடி நிகழ்ச்சிக்காக பந்தல் அமைக்க ரூ.12 கோடியும், தண்ணீர் செலவாக ரூ.1 கோடியும் செலவிடப்பட்டதாக அரசு கூறியதாக அவர் குற்றம்சாட்டினார்.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் கோவிட் தொற்றுநோய்களின் போது மாநிலம் துயரத்தில் இருந்தபோது மோடி புறக்கணித்ததாக குற்றம் சாட்டி, இந்த வருகைகளை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் சமூக ஊடக பிரிவுகள் மீம்களின் மூலம் விமர்சித்தன.

இதுவரை கர்நாடகாவுக்கு பிரதமரின் வருகை

2023: 7 (மார்ச் 25, மார்ச் 12, பிப்ரவரி 27, பிப்ரவரி 12, பிப்ரவரி 6, ஜனவரி 19, ஜனவரி 12)

2022: 3 (நவம்பர் 11, செப் 2, ஜூன் 20)

2021: 0

2020: 1 (ஜனவரி 2)

2019: 6 (செப். 6 (NO), ஏப். 18(NO) , ஏப். 13(NO), ஏப். 12(NO), ஏப். 9(NO), மார்ச் 6 (NO) (Non officials)

2018: 7 (நவம்பர் 12, மே 8,9 (NO), மே 5,6 (NO), மே 3 (NO), மே 1(NO), பிப்ரவரி 27 (NO), பிப்ரவரி 19)

2017: 2 (அக். 29, ஜன. 8)

2016: 3 (நவ. 13, மே 29, ஜன. 2)

2015: 3 (அக். 6, ஏப். 2, பிப்ரவரி 18)

மொத்த வருகை 32

(Source: https://www.pmindia.gov.in/en/pm-visits/?visittype=domestic_visit)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment