Advertisment

காந்தாரா, கர்நாடகா: தென் இந்தியாவிற்கான பா.ஜ.க-வின் கலாச்சார திட்டம்

2019 ஆம் ஆண்டை விட வடக்கில் பாஜக எண்ணிக்கையில் சரிவை சந்திக்கும் நிலையில், அதன் 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் தெற்கில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்தே அமையும்.

author-image
WebDesk
New Update
kantara

kantara

அருண் ஜனார்த்தனன்

Advertisment

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் ஒரே மாநிலமாக இருக்கும் கர்நாடகாவில் தேர்தலுக்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் பிரபல காந்தாரா கன்னட படத்தை பாராட்டினார்.

மாநிலத்தின் "வளமான விவசாய மரபுகளை" காந்தார கொண்டாடுகிறது, இவை "நாட்டை செழிப்பாக மாற்ற பங்களித்தன. படத்தில் உள்ள மரபுகள் இந்து மத நம்பிக்கையில் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்க உதவுகிறது என்று குறிப்பாக அவர் கூறினார்.

காந்தாரா படத்தை, கர்நாடக அமைச்சர் சி என் அஸ்வத் நாராயணனுடன் நெருங்கிய தொடர்புள்ள நிறுவனம் தயாரித்தது. இவர் பாஜக தலைவர் சித்தராமையாவுக்கு எதிராக அவரை "திப்புவைப் போல முடித்து விடுங்கள்" என்ற கருத்துக்காக தற்போது செய்திகளில் உள்ளார்.

அதேபோல், தெற்கில், அக்கட்சியானது, திரைப்படங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் இலக்கியம் உட்பட, அதன் இந்துத்துவா செய்தியில் வசதியாக இடமளிக்கக்கூடிய, பெரும்பாலும் இரண்டாம் நிலை இந்து அடையாளத்துடன், கலாச்சாரம் அல்லது பிராந்தியத்தில் ஆழமாக வேரூன்றிய சின்னங்களைக் கொண்டாடுவதன் மூலம் தனக்கான இடத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறது.

2019 ஆம் ஆண்டை விட வடக்கில் பாஜக எண்ணிக்கையில் சரிவை சந்திக்கும் நிலையில், அதன் 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் தெற்கில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்தே அமையும். இது கட்சியின் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை மேலும் கட்டாயமாக்குகிறது.

பெரும்பாலானவற்றை விட துணை தேசியவாதம் ஆழமாக இயங்கும், தேசிய கட்சிகள் நீண்ட காலமாக ஆட்சியில் இல்லாத தமிழ்நாட்டில், மிகவும் மதிக்கப்படும் தமிழ் துறவியும் கவிஞருமான திருவள்ளுவரை மாநிலத்தில் நுழைவதற்கு ஒரு வழியாக பாஜக அடையாளம் கண்டது. சமீபத்திய ஆண்டுகளில், காவி சால்வை அணிந்த திருவள்ளுவர் படத்தை கட்சி அடிக்கடி பயன்படுத்துகிறது - இது மாநிலத்தின் திராவிடக் கட்சிகளின் கவனத்தில் இருந்து தப்பவில்லை.

சமீபத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழ் இசை அமைப்பாளர் இளையராஜாவை ராஜ்யசபா எம்.பி ஆக்கியது. அவரது சகோதரர் கங்கை அமரனை வேட்பாளராக நிறுத்தி, பிரபல நடிகைகளான கவுதமி, குஷ்பு போன்றவர்களை உறுப்பினர்களாக கட்சி இணைத்துக் கொள்ள முடிந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தமிழ் மற்றும் வாரணாசி இடையே பல நூற்றாண்டுகள் பழமையான தொடர்பைக் கொண்டாடுவதற்காக ‘காசி சங்கமம்’ என்ற ஒரு மாத நிகழ்வுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியின் தொகுதியான உத்தரபிரதேச நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மக்களை அழைத்துச் செல்ல தமிழகத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டன.

மிகவும் பிரபலமான தமிழ் இந்துக் கடவுளான முருகப் பெருமானைக் கொண்டாட பாஜக மாநிலத் தலைமையும் ‘வேல் யாத்திரை’களை வழிநடத்தியுள்ளது.

திமுக ஆட்சியில் பாகுபாடு காட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜகவின் கொள்கைக்கு சேவை செய்வதாகக் கருதப்படும் சொந்த கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், தற்போது, இளைஞர்களை கவரும் வகையில் மாநிலம் முழுவதும் விளையாட்டுக் கலங்களை உருவாக்கி, முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கங்களில் கால் பதித்து வருகிறது.

தமிழ் தேசியவாதத்திற்கான மற்றொரு மூலோபாய நகர்வாக, மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக பிரதிநிதிகள் குழு, சமீபத்தில் இலங்கைக்கு பயணம் செய்து, அங்குள்ள தமிழ் இந்து தலைவர்களை சந்தித்தது. எல்லைக்கு அப்பால் உள்ள தமிழர்களின் இந்து அடையாளத்தை மீண்டும் வலுப்படுத்துதல் மற்றும் உள்நாட்டில் உள்ள அவர்களது சகாக்களிடம் முறையிடுவதே இந்த சந்திப்பின் நோக்கமாக இருந்தது.

தற்போது மறைந்த திமுக தலைவரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் மூலம் கருணாநிதி குடும்பம் தமிழ் திரையுலகைக் கட்டுப்படுத்தி வந்தாலும், பாஜக இங்கும் முன்னேறி வருகிறது. சித்தாந்த நோக்கங்களுக்காக சினிமாவைப் பயன்படுத்துவதில் கடந்த கால மாஸ்டர் திமுக, இந்த வளமான இடத்தை பா.ஜ.க.வுக்கு விட்டுக்கொடுத்ததன் கேலிக்கூத்து குறித்து நீண்டகால அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கர்நாடகாவில் காந்தாரா படத்தைப் போல, கேரளாவில், சபரிமலையை மையமாக வைத்து, சபரிமலை சீசனில், பக்திப் பாடல்களுடன் வெளியாகி வெற்றி பெற்ற மாளிகைப்புறம் திரைப்படம், பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.

கேரளாவில் 2021 சட்டமன்றத் தேர்தலில், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவாக ஆளும் சிபிஐ(எம்)-ஐ ஆதரிப்பதில் பாஜக மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது, இது பக்தர்களால் எதிர்க்கப்பட்டது. மாளிகைப்புறத்தின் ஹீரோ உன்னி முகுந்தன் வெளிப்படையான வலதுசாரி கொள்கை கொண்டவராகக் காணப்படுகிறார்.

2020 ஆம் ஆண்டில், டிரான்ஸ் மலையாளத் திரைப்படத்தின் தமிழ் பதிப்பு, வலதுசாரிகள் மற்றும் பாஜக தலைவர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பழமைவாத, சுவிசேஷ நவ-கிறிஸ்தவ மரபுகள் பற்றிய திரைப்படத்தின் நுட்பமான விமர்சனம் தான் இதன் வெளிப்படையான காரணம்.

வெள்ளித் திரையைத் தவிர, கட்சியின் செய்தியைப் பரப்புவதற்கு பரப்ப செல்வாக்கு மிக்க யூடியூபர்களையும் தமிழ்நாட்டிலுள்ள பா.ஜ.க இணைத்துக் கொண்டுள்ளது.

கர்நாடகாவில், பாஜக உள்ளூரில் அதிகம் அறியப்படாத மன்னர்கள் அல்லது தலைவர்களை புகழ்ந்து பேசி, அடிமட்ட தொடர்புகளை உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் அவர்களை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுகிறது.

இந்த முயற்சிகள் தென்னிந்தியாவின் அரசியல் நிலப்பரப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். திராவிட அடையாளத்துக்காக திமுக அரசுடன் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஆளுநர் ரவியின் தமிழ்நாடு, தொடர்பான கருத்துக்கள் இதற்கு ஆதாரமாக உள்ளது.

இதில் எதிர்பார்க்கப்பட்ட பின்னடைவு பாஜகவைக் கலங்க செய்தது, பிறகு ஆளுநர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு தன் கருத்தில் இருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment