சாலையில் இறந்துகிடந்த ஐஏஎஸ் அதிகாரி!

முதற்கட்ட சோதனையில் அவரது மோவாயில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது

By: May 17, 2017, 10:49:07 AM

கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அனுராக் திவாரி, இன்று (புதன்) காலை லக்னோவில் உள்ள மீராபாய் விருந்தினர் இல்லத்தின் அருகே இறந்து கிடந்துள்ளார். ஏஎன்ஐ தகவலின்படி, அனுராக்கின் உடல் குறித்த தகவல் கிடைத்தவுடன், ஹஜ்ரத்கஞ் பகுதியில் உள்ள அந்த விருந்தினர் மாளிகைக்கு மூத்த அதிகாரிகள் உடனே விரைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை, அவரது உடல் சாலையோரத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடமைகளிலிருந்து கிடைத்த சான்றுகளைத் தொடர்ந்து, அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில், ‘முதற்கட்ட சோதனையில் அவரது மோவாயில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், மற்ற காயங்கள் குறித்து இதுவரை ஏதும் தகவல் இல்லை’ என்றனர்.

மேலும் கிடைத்துள்ள தகவலின்படி, திவாரி, கர்நாடகாவின் 2007-வது ஆண்டு ஐஏஎஸ் பேட்சில் இருந்து வந்தவர் என்றும், அவரது சொந்த ஊர் உத்தர பிரதேசத்தின் பஹரைச் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக அவர் அந்த விருந்தினர் மாளிகையில் தான் தங்கியிருந்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Karnataka ias officer body found in road side at lucknow

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X