குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் பரவிய வதந்தியால் ஐதராபாத்தில் மென் பொறியாளர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் வாட்ஸ்-அப் வதந்தியால் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினியர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் சென்ற 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஐதராபாத்தைச் சேர்ந்த கணிணி பொரியாளர்கள் முஹம்மது அசாம் மற்றும் அவரது கத்தார் நண்பர் முஹம்மது சலாம் பஷீர், சல்மான், அக்ரம் உள்ளிட்ட சிலர் கர்நாடக மாநிலம் பிடார் பகுதியில் காரை நிறுத்தி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த பள்ளி குழந்தைகளுக்கு கர்த்தாரில் இருந்து கொண்டு வந்த சாக்லேட்களை முகமது சலாம் வழங்கியுள்ளார். . இதனை பார்த்த ஒருவர் வாட்ஸ் அப்பில் குழந்தை கடத்தல் கும்பல் சுற்றித் திரிவதாக வதந்தி பரப்பினார்.
இதனையடுத்து, திரளாக கூடிய கிராம மக்கள், 4-பேரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து காரில் ஏறி தப்பிக்க முயன்றபோது, இளைஞர்களை வலுக்கட்டாயமாக காரிலிருந்து இழுத்து அடித்து உதைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் செல்வதற்குள் முகமது ஆசம் இறந்துவிட்டார். மூன்று பேர் பலத்தக் காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, 32-பேரைக் கைது செய்து செய்துள்ளனர்.
வாட்ஸ் அப் வத்ந்திக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வதந்தியால் ஏற்படும் படுகொலைகள் தொடரும் அபாயம் நிலவுகிறது. இதுவரை 20 க்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் வதந்தியால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்சி தகவலும் வெளியாகியுள்ளது.