Advertisment

கர்நாடக தேர்தல்: குமாரசாமியின் மகனை எதிர்த்து சகோதரர் போட்டியிடலாம்- டிகே சிவக்குமார்

சுரேஷ் ராமநகரில் போட்டியிட்டால், நிகிலுக்கு எதிரான போர், மாநில அரசியலின் இரண்டு முக்கிய வொக்கலிகா அரசியல் குடும்பங்களுக்கு இடையேயான பகையை புதுப்பிக்க வாய்ப்புள்ளது.

author-image
WebDesk
New Update
D K Shivakumar

Karnataka Congress president D K Shivakumar

கர்நாடகாவின் ராமநகரா தொகுதியில் மீண்டும் கடுமையான போட்டிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

Advertisment

ஜேடி(எஸ்) தலைவரும், முன்னாள் முதல்வருமான.குமாரசாமியின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் நிகில் குமாரசாமிக்கு எதிராக, தனது சகோதரரும் தற்போதைய பெங்களூரு எம்.பி.யுமான டி.கே. சுரேஷை அந்த தொகுதியில் நிறுத்த முன்மொழிவு இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சிவக்குமார் தனது சகோதரர் அல்லது பிராந்தியத்தில் உள்ள கட்சித் தொண்டர்களுடன் இந்த திட்டத்தை இன்னும் விவாதிக்கவில்லை என்று கூறினார்.

“அவரை களமிறக்க வேண்டும் என்று ஒரு சின்ன யோசனை இருக்கிறது. சுரேஷுடனோ அல்லது எங்கள் கட்சிக்காரர்களிடமோ நான் இதுபற்றி பேசவில்லை. இது ஒரு முக்கிய முடிவாக இருக்கும். நான் இன்னும் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன் ” என்றார்.

இந்த திட்டம் காங்கிரஸ் மேலிடத்திலிருந்து அல்லது மாநிலப் பிரிவினிடமிருந்து வந்ததா என்ற கேள்விக்கு, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், ’நான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர். சில முன்மொழிவுகள் உள்ளன, நான் அதை மறுக்கவில்லை. உள்ளூர் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் என்னை வற்புறுத்தி வருகின்றனர்,, இடைத்தேர்தலை எனது கைகளில் வைத்திருக்க விரும்பவில்லை. சுரேஷ் வெற்றி பெற்றால் அவரது நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும், என்று சிவகுமார் கூறினார்.

சுரேஷ் ராமநகரில் போட்டியிட்டால், நிகிலுக்கு எதிரான போர், மாநில அரசியலின் இரண்டு முக்கிய வொக்கலிகா அரசியல் குடும்பங்களுக்கு இடையேயான பகையை புதுப்பிக்க வாய்ப்புள்ளது. ராமநகரை தற்போது குமாரசாமியின் மனைவியும் நிகிலின் தாயுமான அனிதா பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இத்தொகுதியில் இருந்து ஐந்து முறை வெற்றி பெற்ற குமாரசாமி, ராமநகரை தனது சொந்த ஊராக கருதுகிறார். 2018 சட்டமன்றத் தேர்தலில் குமாரசாமி ராமநகரா மற்றும் சன்னப்பட்டணா ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்ததால் சிவகுமாரின் ஆலோசனையின் பேரில் ராமநகரா தொகுதியை அவர் கைவிட்டார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இரு குடும்பங்களுக்கிடையேயான போட்டிக்குப் பிறகு இது சிவகுமாருக்கும் குமாரசாமிக்கும் இடையிலான ஒரு போர் நிறுத்தத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. சிவக்குமாரும் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

சிவக்குமார் 1985 சட்டமன்றத் தேர்தலில் குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவை எதிர்த்து சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டார்.

2018 இல் இரு கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை அமைத்தபோது ஏற்பட்ட போர் நிறுத்தத்தைத் தவிர்த்து, இது இன்றுவரை நீடித்து வரும் போட்டியை உருவாக்கியது. 1989 முதல் 4 முறை இத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய சிவக்குமார், 1999 சட்டமன்றத் தேர்தலில் குமாரசாமியைத் தோற்கடித்தார்.

2004 ஆம் ஆண்டு, பெங்களூரு ஊரகத்தின் கனகபுரா மக்களவைத் தேர்தலில் தேவகவுடாவை தோற்கடிக்க, அப்போதைய அரசியல் புதியவரும், தற்போதைய பாஜக எம்எல்சியுமான தேஜஸ்வினி கவுடாவுக்கு சிவகுமார் உதவியபோது, 2004 ஆம் ஆண்டில் இரு குடும்பங்களுக்கு இடையேயான பகை உச்சத்தை எட்டியது. கவுடா இரண்டு இடங்களில் போட்டியிட்டு ஹாசன் தொகுதியில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் 14 மாதங்கள் நீடித்த நிலையில், குமாரசாமிக்கும், சிவகுமாருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

சுரேஷை களமிறக்குவது பற்றிய பேச்சு, மதச்சார்பற்ற ஜனதா தளம் உடன் எந்தப் புரிந்துணர்வும் இல்லை என்பதை காங்கிரஸ் தொண்டர்களுக்குச் சொல்லும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டதால், காங்கிரஸ் தொண்டர்கள், குறிப்பாக பழைய-மைசூர் பகுதியில், அதிருப்தி அடைந்தனர்.

சுரேஷ் மற்றும் வொக்கலிகா தலைவராக வெளிவர முயற்சிக்கும் உயர்கல்வி அமைச்சர் சி.என் அஸ்வத் நாராயண் இடையே சமீபகாலமாக ஏற்பட்ட தகராறும் இந்த முன்மொழிவுக்கு மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment