பெங்களூரில் தமிழ் பேனர்கள் கிழிப்பு… கன்னட வெறியர்களின் அட்டகாசம்!

பெங்களூருவில் தமிழில் இருந்த பேனர்களை கன்னட ரக் ஷண வேதிக் உறுப்பினர்கள் சிலர் கிழித்து எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By: Updated: August 16, 2017, 02:00:16 PM

பெங்களூரில், தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் புலகேஷிநகரில் இந்த சம்பம் அரங்கேறியுள்ளது. பெங்களூரில் உள்ள புலகேஷிநகரில், ஆடி கிருத்திகை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி தமிழ் மொழியில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

தமிழில் இருந்த அந்த பேனர்களின் பகுதிகளை கர்நாடகா ரக் ஷண வேதிக் உறுப்பினர்கள் சிலர் கிழித்து எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூல்நிலை நிலவி வருகிறது.

முன்னதாக சுதந்திர தின விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசும்போது: கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழி தான் முதன்யானது. கன்னட மொழிக்கு எதிரான எம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், பெங்களூரில் தமிழ் மொழியில் இருந்த பேனர்கள் கிழித்து எறியப்பட்டுள்ளன. கர்னட ரக் ஷண வேதிக் உறுப்பினர் எதற்கான தமிழ் பேனர்களை கிழித்து எறிந்தனர் என்பது குறித்து என்று தெரியவில்லை. எனினும், ொழி வெறி காரணமாகவே அவர்கள் தமிழ் பேனர்களை கிழித்தெறிந்ததாக கூறப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Karnataka rakshana vedike members cut out content printed in tamil from posters put up in bengalurus pulakeshinagar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X