திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவும், சட்டமன்ற பொன்விழா ஆண்டும் நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அகில இந்திய தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள ஒப்புதல் கொடுத்திருந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ் உடல் நல குறைவு காரணமாக, கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று திமுக தலைமைக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து லாலு வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.