Advertisment

வாக்களிக்க எல்லை தாண்டி வரும் தமிழர்கள்… காரணம் என்ன?

election news in tamil, kerala tamil residents cross border for vote: ஒவ்வொரு தேர்தலின்போதும் இங்குள்ள தமிழர்கள் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தங்கள் சொந்த கிராமங்களுக்கு வாக்களிக்க ரயில் அல்லது அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் செல்கிறார்கள். இந்த ஆண்டு இரு மாநில தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடக்கின்றன.

author-image
WebDesk
New Update
வாக்களிக்க எல்லை தாண்டி வரும் தமிழர்கள்… காரணம் என்ன?

கொச்சியில் உள்ள வெல்லிங்டன் தீவின் ஒரு பகுதி வாத்துருதி. இங்கு தமிழ்நாட்டிலிருந்து சுமார் 5000 பேர் வசிக்கிறார்கள். இந்தக் காலனிக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் துணி பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் வணிகர்கள் நிரம்பி வழிகின்றனர். இந்தப் பகுதியில் மலையாளத்தை விட தமிழே அதிகம் கேட்கும். எம்.ஜி.ஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் தமிழக அரசியல் கட்சிகளின் சின்னங்கள்  போன்றவை இங்கு காணக் கிடைக்கும்.

Advertisment

ஒவ்வொரு தேர்தலின்போதும் இங்குள்ள தமிழர்கள் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தங்கள் சொந்த கிராமங்களுக்கு வாக்களிக்க ரயில் அல்லது அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் செல்கிறார்கள். இந்த ஆண்டு இரு மாநில தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடக்கின்றன.

வாத்துருத்தி எர்ணாகுளம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும். அங்கு யு.டி.எஃப் எம்.எல்.ஏ வினோத் எல்.டி.எஃப் இன் ஷாஜி ஜார்ஜூக்கு எதிராக நிற்கிறார்.

தமிழ்நாட்டின் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சுப்பையா கடந்த 40 ஆண்டுகளாக தினக்கூலியாக கொச்சியில் வேலை செய்து வருகிறார். இவர் ஏப்ரல் 4ஆம் தேதி வாக்களிக்க தனது சொந்த ஊருக்கு செல்கிறார்.

எர்ணாகுளத்தின் மையப் பகுதியில் வசிக்கும் சுப்பையா போன்ற தமிழர்கள், இங்கு வழங்கப்படும் குடிநீர், மின்சாரம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை அனுபவித்துவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்கிறார்கள்.

35 வயது கட்டுமான தொழிலாளி வெங்கட்ராமன் , கேரளாவில் தினசரி ஊதியம் அதிகம். ஒரு கட்டிட தொழிலாளிக்கு இங்கு ரூ.1000 சம்பளமாக கிடைக்கிறது. அதேநேரம் தமிழ்நாட்டில் ரூ.600 மட்டுமே.. இருப்பினும், எங்களிடம் தமிழக ரேசன் கார்டு இன்னும் உள்ளது. நாங்கள் வாக்களிக்கவில்லை என்றால் எங்களது பெயர் பொது விநியோக திட்டத்திலிருந்து நீக்கப்படும். மேலும் இங்கு மக்கள் நல திட்டங்களும் சிறப்பாக உள்ளது. என்கிறார்.

இவருடைய மனைவி ரேகா அவரும் கட்டுமான தொழிலாளிதான். அவர் மாதம் இருமுறை திருவண்ணாமலைக்கு தங்கள் குழந்தைகளை பார்க்கவும் ரேசன் பொருட்கள் வாங்கவும் செல்கிறார்.

தமிழக தொழிலாளிகளுக்கு தங்கும் அறைகளை வாடகைக்கு விடும் பஷீர் கூறுகையில், இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வாக்களிக்க செல்வதன் உண்மையான காரணம் அங்குள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து ஒருவருக்கு ரூ.5000 வரை கிடைக்கிறது. ஆனால் கேரளாவில் இது கிடைப்பதில்லை என்கிறார்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே இலவசங்களை அறிவிக்கின்றன. இலவச அரிசி முதல், தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மிஷின் போன்றவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கின்றன.

அதேபோல், இந்த தேர்தலில் கேரளாவிலும் இத்தகைய அறிவிப்புகள் உள்ளன. எல்.டி.எப் அரசாங்கத்தின் இலவச திட்டங்களும், சமூகநல ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வாக்காளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 மற்றும் அனைத்து வெள்ளை அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ இலவச அரிசி மற்றும் 5 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இரு மாநில வாக்காளர் பட்டியல்களிலும் உள்ளன. அதனால் அரசியல் கட்சிகளிடையே இவர்கள் வாக்குகளை பெற போட்டி நிலவுகின்றன.  அதுவும் குறிப்பாக உள்ளாட்சி தேர்தல்களின் போது இவர்கள் வாக்கு முக்கிய பங்காற்றுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tn Assembly Election Kerala Assembly Elections 2021 Tamilnadu Voters List
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment