Advertisment

மகளின் திருமணத்தில் அசம்பாவிதம் : பாட்டு பாடியபடி சரிந்த தந்தை (வீடியோ)

விஷ்ணுபிரசாத் மரணமடைந்த தகவல், மணக்கோலம் தரித்திருக்கும் மகள் அர்ச்சா மற்றும் விஷ்ணுபிரசாத்தின் மனைவிக்கு, திருமணம் முடியும்வரை தெரிவிக்கப்படவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kerala, trivandraum, police, heart attack, wedding, video, கேரளா, திருவனந்தபுரம், போலீஸ், மாரடைப்பு, திருமணம், வீடியோ

kerala, trivandraum, police, heart attack, wedding, video, கேரளா, திருவனந்தபுரம், போலீஸ், மாரடைப்பு, திருமணம், வீடியோ

மகளின் திருமணத்தில் உற்சாகமாக பாட்டு பாடிய தந்தை, கீழே சரிந்து விழுந்து மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் சரிந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கேரள மாநிலம் திருவனந்தபுரம் போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ . ஆக இருப்பவர் விஷ்ணுபிரசாத் ( வயது 55). இவரின் இளைய மகள் அர்ச்சாவின் திருமணம், கொல்லம் மாவட்டம் நீண்டகாரா நடைபெற்றது. சனிக்கிழமை நடந்த நிச்சயதார்த்த நிகழ்வில், ஆர்கெஸ்ட்ரா இசை முழங்க, மகளை பிரியும் சோகத்தில் அதேநேரம் உற்சாகமாக மேடையில் விஷ்ணுபிரசாத் பாட்டு பாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பின்னால் சரிந்த விஷ்ணுபிரசாத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் மரணமடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

விஷ்ணுபிரசாத் மரணமடைந்த தகவல், மணக்கோலம் தரித்திருக்கும் மகள் அர்ச்சா மற்றும் விஷ்ணுபிரசாத்தின் மனைவிக்கு, திருமணம் முடியும்வரை தெரிவிக்கப்படவில்லை. விஷ்ணுபிரசாத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் தேறிவருவதாகவே அவர்களிடம் தெரிவித்திருந்தனர். திருமணமும், ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி நடைபெற்றது. மணமகன் பெயரும் விஷ்ணுபிரசாத் தான். மகள் மறுவீட்டு நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, அவர்களிடம் மரணச்செய்தி தெரிவிக்கப்பட்டது. விஷ்ணுபிரசாத்தின் இறுதிச்சடங்கு, திங்கட்கிழமை நடைபெற்றது.

பாட்டு பாடியபடி சரியும் விஷ்ணுபிரசாத்...(வீடியோ)

மரணம்,எந்தநேரத்தில் வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இருக்கும் நாளிலாவது மற்றவர்களிடம் அன்பு செலுத்தி பண்பானவர்களாக இருப்போம்...

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment