கேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்

கேரளாவில் மது விற்பணை அடியோடு தடை செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.  

கேரளா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு வெறும் ஐந்து நாட்களே கடந்த நிலையில், தீவிர மது பழக்கம் உடைய ஐந்து நபர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொரோனா வைரஸுக்கு எதிராக பல மட்டங்களில் போராடி வரும் கேரளாவில், மதுப்பழக்கம்      உடையவர்களின் உடல்நலக் குறைபாடுகள் குறித்த செய்திகள்  வந்த வண்ணம் உள்ளன.

கடந்த காலங்களில் கேரளாவில் பல்வேறு வழிகளில் மது விற்பனைக்கு கட்டுப்பாடுககள் விதித்திருந்தாலும், தற்போது போல், அங்கு மதுபான விற்பணை அடியோடு தடை செய்யப்பட்டதில்லை

கேரள சுகாதார அமைச்சர் கே.கே ஷைலஜா இது குறித்து கூறுகையில் ,”மாநிலத்தின் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகள் யாவும்  கொரோனா கண்காணிப்புக்காக செயல்பட்டு வருகிறது. எனவே, குடும்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் உள்ளடக்கிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் மதுப்பிரச்சனை தொடர்பான சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை தேவைப்படும் அவசர நோயாளிகள் மட்டும் மாவட்ட (அ) தாலுகா நிலை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அனைத்து மாவட்டத்திலும் இதற்காக 20 படுக்கைகள் பிரத்தியோகமாக ஒதுக்கப்பட்டுள்ளன, என்றும் தெரிவித்தார்.

மாநில போதைப்பொருள் தடுப்பு தலைமை நிர்வாக அதிகாரி டி.ராஜீவ் கூறுகையில்,“ தீவிர மதுப்பழக்கம் உடையவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூன்று மதுதடுப்பு மையங்களில் தொலைபேசி ஏற்பாடு வசதிகளை  செய்துள்ளோம்.

அனைத்து மறுவாழ்வு மையங்களிலும் புதிய சேர்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. முன்னதாக,  மலப்புரத்தில் கடுமையான மதுப்பழக்கம் கொண்ட இருவரின் தற்கொலை முயற்சிகள் பற்றிய செய்திகள் வெளிவந்தது.

எனவே, மோசமான மனநலப் பிரச்சினைககளுடன், அவசர மருத்துவ கவனிப்பும் தேவைப்படும் சுமார் 100 பேர்களை அடையாளம் கண்டுள்ளோம்.  அரசுத் துறையில் உள்ள வசதிகளைத் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனியார் போதைப்பொருள் மறுவாழ்வு மையங்களின் ஆதரவையும் நாங்கள் நாடுவோம்,” என்று தெரிவித்தார்.

மாநில டெலி-கவுன்சிலிங் மையத்தின் ஆலோசகர் ஒருவர், கூறுகையில்,” அன்றாட அளவு மதுபானத்தைப் பெறாத பலர் Withdrawal symptoms-ஐ காட்டுகின்றனர். கை நடுக்கம், வியர்வை, நீர்ப்போக்கு போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தாண்டி, சிலருக்கு தற்கொலைக்கான அழுத்தமும் வந்துள்ளது. மதுவுக்கு அடிமையானவர்களின் மனச்சோர்வு மிகவும் ஆபத்தானது”என்றும் தெரிவித்தார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kerala coronavirus lockdown liquor shop closed withdrawl symptoms

Next Story
‘மன்னிப்புக் கேட்கிறேன்; ஆனால் இது அவசியம்’ – பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ ஹைலைட்ஸ்PM Modi ‘Mann ki Baat’ Apologise for harsh steps india lock down covid-19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com