கொச்சி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர், ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயெ கிழே விழுந்து நொறுங்கியதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது.
ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் கிழே விழுந்ததில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நெடும்பசேரியில் விபத்துக்குள்ளான கடலோர காவல்படை ஹெலிகாப்டர் பாதுகாப்பான தூரத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஓடுபாதை திறக்கப்பட்டது. நெடும்பசேரி விமான நிலையம் அருகே கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
பயிற்சி விமானம் பறக்கத் தயாராகும் போது ஹெலிகாப்டர் திடீரென விழுந்தது. ஹெலிகாப்டரில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
ஓடுபாதைக்கு வெளியே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் நகர்ந்த பிறகு ஓடுபாதை திறக்கப்படும் தகவல் வெளியாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”