பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாக புகார் எழுப்பிய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவின் பணியிட மாற்றம் ஏற்றூக்கொள்ள முடியாதது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
முன்னதாக, சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அதற்காக சசிகலா தரப்பில் சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயண ராவிற்கு 2 கோடி ரூபாய் தரப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, புகார் எழுப்பிய ரூபாய், மற்றும் குற்றம்சாட்டப்பட்ட சத்யநாராயண ராவ் ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில், ரூபா போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறைக்கான டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
டி.ஐ.ஜி. ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு தொடர்ந்து பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்திடரின் இரண்டாவது நாளான செவ்வாய் கிழமை, கர்நாடக பாஜகவினர் ரூபாவின் பணியிட மாற்றத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் இந்த போராட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/kiran-bedi-759-300x217.jpg)
அதேபோல், டி.ஐ.ஜி. ரூபாவின் பணியிட மாற்றத்திற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் கண்டனம் தெரிவித்தார். அவரது பணியிட மாற்றம் ஏற்றுக்கொள்ள முடியாது என கிரண்பேடி குறிப்பிட்டார். இருப்பினும் ரூபா இந்த முடிவை அதே தைரியத்துடனும், அதைன பொருட்படுத்தாமல் மனதிடத்துடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என கிரண்பேடி தெரிவித்தார். கிரண்பேடி தனக்காக பேசியதற்கு டி.ஐ.ஜி. ரூபா நன்றி தெரிவித்துள்ளார்.