Advertisment

22 நாட்கள் தேடுதல் பணி: யானை, நாய், டிரோன் உதவியுடன் குனோவின் கடைசி சிறுத்தை பிடிபட்டது

எஞ்சியிருக்கும் சிறுத்தைகளின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்காக 11 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kuno Cheetah

Kuno Cheetah

மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இருந்த கடைசி ப்ரீ ரேஞ்சிங் சிறுத்தை (Last free-ranging cheetah) வனவிலங்கு அதிகாரிகளால் நேற்று கண்காணிக்கப்பட்டது. இந்த சிறுத்தையின் ரேடியோ காலர் 3 வாரங்களுக்கு முன் செயலிழந்த நிலையில் தேடல் வேட்டை நடைபெற்றது.

Advertisment

நிர்வா என்ற பெண் தென்னாப் பிரிக்க சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் குனோ தேசிய பூங்காவின் தோரேட் மலைத்தொடரில் பிடிபட்டது. இதன் மூலம் அதிகாரிகளின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ரேடியோ காலர் காரணமாக மாகோட் தொற்று ஏற்பட்டு 2 சிறுத்தைகள் உயிரிழந்தது அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது. இதன் பின் சிறுத்தைகளின் ரேடியோ காலர்கள் அகற்றப்பட்டு, அமைதிப்படுத்தி அவற்றை கூண்டுக்குள் வைக்கப்பட்டு வருகிறது.

தலைமை வனவிலங்கு காப்பாளர் அசீம் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், குனோ தேசிய பூங்காவில் உள்ள மொத்தம் 15 சிறுத்தைகளும் (7 ஆண், 7 பெண் மற்றும் 1 பெண் குட்டி) தற்போது கூண்டுக்குள் அடைக்கப்பட்டு ஆரோக்கியமாக உள்ளன. அவை குனோ கால்நடை மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

சிறுத்தைகளின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்காக 11 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

குனோ தேசிய பூங்காவில் கடந்த 5 மாதங்களில் 9 சிறுத்தைகள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 2-ம் தேதி, தாத்ரி (திப்லிசி) என்ற பெண் சிறுத்தை இறந்தது. நிர்வா காணாமல் போன நிலையில் இது மேலும் கவலையை ஏற்படுத்தியது. தொழில்நுட்ப கோளாறால் ரேடியோ காலர் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் செய்வதறியாது போயினர். சிறுத்தையைக் கண்டுபிடிக்க பாரம்பரிய முறைகளை நம்பியிருந்தனர்.

“கடந்த 22 நாட்களாக நிர்வாவைத் தேடும் பணி நடந்து வந்தது. ஜூலை 21-ம் தேதி அவளது ரேடியோ காலர் செயல் படவில்லை. அவளைத் தேட பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.

வனவிலங்கு அதிகாரிகள் தலைமையில் 100-க்கும் மேற்பட்டஊழியர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் சிறுத்தை கண்காணிப்பாளர்கள், நமீபியாவில் இருந்து நிபுணர்கள் உட்பட, குனோ நிலப்பரப்பின் 20 சதுர கிலோ மீட்டர்களை தினசரி அடிப்படையில் ஆய்வு செய்தனர்.

இதில் 2 ட்ரோன் குழுக்கள், நாய் படைகள் மற்றும் யானைகள் ஆகியவையும் உதவிக்காக பயன்படுத்தப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து சுற்று வட்டார கிராம மக்களுக்கு நிர்வா பற்றி தெரிவிக்கப்பட்டது. கிராம மக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் உடனடியாக சரிபார்க்கப்பட்டது" என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.

ஆகஸ்ட் 12 அன்று, நிர்வாவின் இருப்பிடம் செயற்கைக் கோள் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றது. ரேடியோ காலர் சிறிது நேரத்தில் வேலை செய்யத் தொடங்கியது. அதிகாரிகளின் நம்பிக்கையை உயர்த்தியது.

அதே நாளில் மேலும் சில இடங்களும் பெறப்பட்டன. உடனடியாக, தேடுதல் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு ட்ரோன் குழு மற்றும் ஒரு நாய்க் குழுவின் உதவியுடன், குழு இறுதியாக நிர்வாவை மாலையில் பார்க்க முடிந்தது, ஆனால் அவளைப் பிடிக்க முடியவில்லை, ”என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.

நிர்வா ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இருட்டிவிட்டதால் இன்று மீண்டும் பணியைத் தொடங்க முடிவு செய்தனர்.

ட்ரோன் குழு நிர்வாப் பிடிக்க இரவு முழுவதும் வேலை செய்தது. . அதிகாலை 4 மணியளவில், குழு பணியை தொடங்கியது. பின்னர் தொடர்ந்து 6 மணி நேரத்தில் சிறுத்தையை பிடித்தனர். தேசிய பூங்காவின் மூத்த அதிகாரிகள் தலைமையிலான ட்ரோன் குழு, நாய் படை, யானைகள், கள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களின் நன்கு ஒருங்கிணைந்த முயற்சி, நிர்வாவை வெற்றிகரமாக பிடிக்க உதவியது என்று வார்டன் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madhya Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment