Advertisment

ஒரு அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

இன்று அதிகாலை 4 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஒரு அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

Indian army soldiers stand guard near the Indian Air Force (IAF) base at Pathankot in Punjab, India, January 3, 2016. A gold medal-winning Indian shooter was among 10 people killed in an audacious pre-dawn assault on the air force base, officials said on Sunday as troops worked to clear the compound near India's border with Pakistan after a 15-hour gunbattle. REUTERS/Mukesh Gupta

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் இன்று நடத்தி வரும் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குப்வாராவின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பஞ்ச்காம் ராணுவ முகாம் மீதுதான் இந்த தாக்குதல் நடப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் போலீசார் இதனை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

தற்போது நடந்து வரும் இந்தத் தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட 3 ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதாவும், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதால், தீவிரவாதிகளின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

Army Terrorist
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment