வருமானவரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு! தாக்கல் செய்வது எப்படி?

கடைசி நாள் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ந் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்

வருமானவரித் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வருமான வரி செலுத்துபவர்கள், 2017-18 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குள் (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏராளமானோர் தங்கள் வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறை அலுவலகங்களில் நேரிலும், நேரில் தாக்கல் செய்ய இயலாதவர்கள் இணையதளம் வாயிலாகவும் தாக்கல் செய்து வருகின்றனர்.

வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய ஏதுவாக விடுமுறை நாளான நேற்றும் அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன. வருமான வரித்துறை அலுவலகங்களில் கணக்கு தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமானோர் நேரில் வந்து தங்களது கணக்குகளை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 5-ந் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

இணையத்தளம் மூலம் வருமான வரிகணக்கு தாக்கல் செய்வது எப்படி?

– வருமான வரி தாக்கல் செய்யும் இணையத்தளமான incometaxindiaefiling.gov.in. என்ற இணையத்தளத்திற்கு செல்லுங்கள், அங்கு ITR என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

– ITR-1 என்பது, மாத சம்பளதாரர்கள் மற்றும் மாத வருமானம் 2.5 லட்சத்தைவிட குறைவாக உள்ளவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்காக. ITR-2 என்பது மாத வருமானம் 5 லட்சத்திற்கு அதிகமாக உள்ளவர்களுக்கு. ITR-3 என்பது சொந்த தொழில் செய்பவர்களுக்கானது. ITR-4 என்பது வருவாய் கூடினாலும், குறைந்தாலும், அரசு நிர்ணயித்த வருவாய்க்கு ஏற்ப, குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்தும் வணிகர்கள் அல்லது தொழில் செய்வோர்களுக்கானது.

– ITR-2-ஐ க்ளிக் செய்யுங்கள். அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனமாக படியுங்கள். அதன்பிறகு, விண்ணப்பத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் பெயர், பான் எண் எனப்படும் நிரந்தர கணக்கு எண், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவற்றை கவனமாக நிரப்புங்கள். அதை முடித்த பின்பு, ’Validate’ என்பதை க்ளிக் செய்தால் திரையில் ’OK’ என காட்டும். அதனை க்ளிக் செய்யுங்கள்.

– இதன்பின் ‘Part B’ என்ற அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள். அதை முடித்த பிறகு வருமான வரி தாக்கல் செய்யும் பக்கத்திற்கு செல்லுங்கள். அதில், நீங்கள் ஏற்கனவே வருமான வரிக்கென முன்பணம் செலுத்தியிருந்தால் அதனை குறிப்பிடுங்கள்.இதன்பின் ‘Validate’ என்பதை க்ளிக் செய்யுங்கள்.

– அதன் பின், TDS பக்கத்திற்கு செல்லுங்கள். அதன்பிறகு ‘Validate’ என்பதை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் ஏதேனும் சொத்துக்களை விற்றிருந்தால் 18 C விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.

– இதையடுத்து, வருமானம் பக்கத்த்திற்கு சென்று, பெயர், முகவரி, வருமானம் ஆகியவற்றை குறிப்பிடுங்கள். பின்பு, ‘Validate’ என்பதை க்ளிக் செய்யுங்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close