Advertisment

தொழிலதிபர் மீது கார் மோதி விபத்து.. சட்டக்கல்லூரி மாணவர்.. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். தந்தை கைது!

வோக்ஸ்வேகன் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், சட்டக்கல்லூரி மாணவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அவரது தந்தையும்’ கைதாகினர்.

author-image
WebDesk
New Update
delhi accident

Law student held, his retd bureaucrat father booked for GK hit-and-run

செவ்வாய்கிழமை தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் 1 பகுதியில்’ தொழிலதிபரை தனது காரால் தாக்கி’ பானட்டில் இழுத்துச் சென்றதாக 27 வயது சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். அவருடன்’ ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அவரது தந்தையும்’ தனது மகனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி’ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Advertisment

வோக்ஸ்வேகன் டி-ராக் காரை ஓட்டியதாகக் கூறப்படும் ராஜ் சுந்தரம், குர்கானில் உள்ள முன்னணி தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் அவரிடம் உரிமம் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை மாலை 6 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஆனந்த் விஜய் மண்டேலியா (37) என்ற நபரின் குடும்பத்தினர், அவருக்கு தலையில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தனது குடும்பத்துடன் GK-I இல் வசிக்கும் ஆனந்த், ஹைட்ரோபோனிக்ஸ் வணிகத்தை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து டிசிபி (தென் மாவட்டம்) பெனிடா மேரி ஜெய்கர் கூறுகையில், “ஆரம்பத்தில், வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் கடுமையான காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வெளிவந்த உண்மைகளின் அடிப்படையில் தற்போது புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர் குர்கானில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலுக்கு வெளியே கைது செய்யப்பட்டார். அவர்மீது IPC பிரிவுகள் 307 (கொலை செய்ய முயற்சி) மற்றும் 308 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோலிய அமைச்சகத்தில் இணைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ராஜின் தந்தை பாண்டியன் கல்யாண சுந்தரத்தையும் கைது செய்துள்ளோம். அவர் மீது ஐபிசி பிரிவு 212 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஹிட் அண்ட் ரன் சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், சாட்சிகளுடன் பேசிய பிறகு, வோக்ஸ்வேகன் கார்’ மண்டேலியாவை அவரது வீட்டிற்கு வெளியே மோதியதைக் கண்டறிந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வெந்தய நிற கார் ஒன்று’ அதிவேகமாக மோதியதில், ஆனந்த் விஜய் 100 மீட்டருக்கு மேல் இழுத்துச் செல்வதைக் கண்டுபிடித்தனர்.

“காவல்துறையினர் ராஜின் வீட்டை அடைந்து, சோதனை நடத்தினர். ஆனால் அங்கு இருவரையும் காணவில்லை. பிறகு’ அங்கிருந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் தொழில்நுட்பக் கண்காணிப்பைப் பயன்படுத்தி தேடும் போது’ தந்தையும், மகனும்’ வாட்ஸ்அப் மூலம் தங்கள் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் தொடர்பு கொண்டது தெரியவந்தது. பிறகு இருவரும்  லீ மெரிடியன் ஹோட்டலில் இருந்து கைது செய்யப்பட்டனர், ”என்று ஒரு அதிகாரி கூறினார்.

போலீசாரின் கூற்றுப்படி, விசாரணையின் போது, ​​ராஜ் முதலில் தனது தந்தை வாகனத்தை ஓட்டியதாகக் கூறினார். இருப்பினும், டிரைவரின் சீட்டின் பக்கத்திலிருந்து ராஜ் வெளியேறுவதை காட்டும் சிசிடிவி காட்சிகளைக் கண்டுபிடித்ததாக காவல்துறை கூறுகிறது.

"அவரது காரின் ஸ்பீடோமீட்டரின் பல வீடியோ கிளிப்களை அவரது ஃபோனில் இருந்து மீட்டுள்ளோம்... இது மணிக்கு 120 கிமீ வேகத்திற்கு மேல் காட்டுகிறது. இந்த வீடியோக்கள் தெற்கு டெல்லியின் வெவ்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்டதாக இருப்பிடங்கள் தெரிவிக்கின்றன, ”என்று ஒரு அதிகாரி கூறினார், கார் ராஜின் தந்தையால் வாங்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment