மேற்கு வங்க ஐகோர்ட் நீதிபதி கர்ணனை கைது செய்ய கடந்த 9.5.17 அன்று சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டது. அதையடுத்து அவரைத் தேடி மேற்கு வங்க போலீசார் சென்னை வந்தனர். இன்று வரையில் கர்ணனை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் இன்று கர்ணன் ஓய்வு பெற்றுவிட்டார். இப்போதாவது நீதிபதிகர்ணனை கைது செய்ய ஒத்துழைப்புத் தாருங்கள் என்று மேற்கு வங்க டிஜிபி கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு மேற்கு வங்க டிஜிபி சுர்ஜித்கர் புர்க்யஸ்தா எழுதிய கடிதத்தின் விபரம் வருமாறு:
மேற்கு வங்க நீதிபதியாக இருந்த இருந்த கர்ணன் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கில் கைது செய்யுமாறு சுப்ரிம் கோர்ட் 9.05.17 அன்று உத்தரவிட்டது. அன்று காலையில் அவர் விமானம் மூலம் சென்னை சென்றுவிட்டது தெரிய வந்தது. உடனடியாக சென்னை போலீசாருக்கு நீதிபதி கர்ணனை கைது செய்ய உத்தரவு வந்திருக்கிறது. அவர் சென்னையில் இருந்தால் அவரை கைது செய்து வைத்திருங்கள். அடுத்த விமானத்தில் மேற்கு வங்க போலீசார் வருவார்கள் என்று விருவாக சொல்லப்பட்டது. அதனை 9ம் தேதி இரவே கண்ட்ரோல் ரூமில் ரிசிவ் பண்ணியிருக்கிறார்கள்.
அடுத்த நாள் காலையில் அதாவது 10.05.17 அன்று மேற்கு வங்க போலீஸ் அதிகாரி ஸ்ரீ ராஜ் கனோஜியா சென்னை வந்தார். அன்று காலை 9.45 மணி வரையில் நீதிபதி கர்ணன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்துள்ளார். அதன் பின்னர் அவர் அங்கு இல்லை. 10.30 மணிக்கு மேற்கு வங்க போலீசாரோடு தமிழக போலீசார் விருந்தினர் மாளிகை சென்ற போது, அவர் அங்கில்லை. கிடைத்த தகவலின் அடிப்படையில் அவருடைய வீடு, உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மேற்கு வங்க போலீஸ் டீம்முக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என உங்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
11.05.17 அன்று நீதிபதி கர்ணன் சார்பில் சுப்ரிம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நீதிபதி கர்ணன் சென்னையில்தான் இருக்கிறார் என்று தெரிவித்து இருந்தார்.
எங்கள் போலீஸ் அதிகாரிகள் இன்னமும் சென்னையில் தங்கியிருந்து, நீதிபதி கர்ணனை தேடி வருகிறார்கள். சுப்ரிம் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. சுப்ரிம் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற, நீதிபதி கர்ணனை பிடிக்க முறையான ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று மேற்கு வங்க டிஜிபி கடிதத்தில் கூறியுள்ளார்.