மும்பையை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கர். 27 வயதான இவர் மும்பையில் பணிபுரிந்தபோது, அவருக்கு 28 வயதான அல்ஃதாப் பூனவாலா என்பவர அறிமுகமானார். இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஷ்ரத்தா மற்றும் அல்ஃதாப் ஆகிய இருவரும் டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்குமான உறவு 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்துள்ளது. தொடர்ந்து ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அல்ஃதாபிடம் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அல்ஃதாப், அவருடன் சண்டையிட்டுள்ளார்.
அல்ஃதாப்
Advertisment
Advertisement
அல்ஃதாப் உடன் இணைந்து வாழ்ந்த காலக்கட்டத்தில் ஃஷ்ரத்தா அவரின் பெற்றோருடன் தொடர்பு கொள்வதை முற்றிலும் தவிர்த்து வந்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர்கள் பதிவிட்ட படங்களை பார்த்து பெற்றோர் தனது மகள் டெல்லியில் இருப்பதை அறிந்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி சென்ற பார்த்த போது தனது மகள் கொலையுண்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அல்ஃதாப், ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடலை 35 பாகங்களாக வெட்டியுள்ளார். தொடர்ந்து அந்தப் பாகங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு பல நாள்கள் அந்த அறையிலேயே தங்கியுள்ளார். மேலும் அந்த உடல் பாகங்களை டெல்லியின் பல இடங்களில் வீசியுள்ளார்.
மேலும் இந்தக் கொலை நடந்த நாள்களில் அல்ஃதாப் மற்றொரு பெண்ணை அறைக்கு அழைத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுடனும் அவர் தொடர்பில் இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். ஷ்ரத்தா கொலையை மறைக்க அவரது சமூக வலைதள கணக்குகளை கையாண்ட அல்ஃதாப் அவரது நண்பர்களுடன் அரட்டை (சாட்) செய்துள்ளார். மேலும் கிரெடிட் கார்டு பில்-ஐயும் கட்டியுள்ளார். ஷ்ரத்தா படுகொலை டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil